‘தமிழர் செய்தி’

விடுதலைப் புலிகள் அணுவாயுதங்களை பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தனர்

தமிழீழ விடுதலைப் புலிகள் அணுவாயுதங்களையும் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்ததாக பிரபல சிங்கள வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்…

ராஜபக்சே மருமகன் தான்சானியாவில் மர்ம சாவு!

அருசா (தான்சானியா): இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மருமகன் ஷியாம்லால் ராஜபக்சே இன்று தான்சானியாவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அது இயற்கை மரணமா அல்லது கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்…

வன்னியில் பாரிய மனித புதைகுழிகள் இருக்கின்றமை செய்மதி படங்களின் மூலம் அம்பலமாகியுள்ளது : சர்வதேச மன்னிப்பு சபை

வன்னியில் இறுதிகட்ட யுத்தம் இடம்பெற்றதன் பின்னர் தொடர்சியாக எடுக்கப்பட்ட செய்மதி படங்கள் மூலம் பாரிய மனித புதைகுழிகள் இருப்பதற்கான சாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை இன்று தெரிவித்துள்ளது.

மேலும்…

அமெரிக்கா – விடுதலைப்புலிகள் தொடர்புகளை கே.பி. அம்பலப்படுத்தியுள்ளார்: லக்ஸ்மன் யாப்பா

அமெரிக்க அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடித் தொடர்புகள் காணப்பட்டதாக குமரன் பத்மநாதன் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளாரென இலங்கையின் ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும்…

பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான தெளிவான ஆதாரம் உண்டு: அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்க சங்கம்

வன்னியில் போர் உக்கிரமடைந்திருந்த இறுதி நாட்களில் சிறிலங்கா அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்துக்குள் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததும், மக்களின் தற்காலிக தங்கும் இடங்களுக்கு மிக அருகிலேயே படையினரின் கனரக ஆயுதங்கள், மோட்டார் நிலைகள் இருந்ததும் மிகத் தெளிவாக செய்மதிப் படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்க சங்கம் தனது முழுமையான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும்…

வாக்குறுதி அளித்தபடி அரச தலைவர் பதவியை இல்லாது ஒழியுங்கள்: மகிந்தவுக்கு ஜே.வி.பி. கடிதம்

சிறிலங்கா அரச தலைவரின் முதலாவது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அடுத்த அரச தலைவர் தேர்தலை நடத்துவதற்கு அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்குக் ஜே.வி.பி. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

மேலும்…

ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது

கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவைக் கொலை செய்ய விடுதலைப் புலிகளுடன் இணைந்து திட்டம் தீட்டிய சிங்களர் ஒருவரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. இதனால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும்…

மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை கண்டு பிடிக்க முன்னாள் புலி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு: இராணுவ தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை கண்டு பிடிப்பதற்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வரும் முன்னாள் புலி உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதாகவும், அவர்கள் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை காட்டி வருவதாகவும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும்…

கே.பி. மூலம் புலிகளின் நிதியினைப் பெற்று அபிவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டும்: எல்லாவல மேதானந்த தேரர்

புலிகளினால் நாட்டிற்கு செய்யப்பட்ட அழிவுகளை கே.பி. யின் ஊடாக விசாரணை செய்து புலிகளின் நிதியினைக் கொண்டே வடக்கையும் ஏனைய பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பி.யுமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

மேலும்…

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவை குறிவைக்க றோவின் உதவியை நாடும் இலங்கையின் புலனாய்வுத்துறை

ஓய்வுபெற்ற நீதியரசர் சரத் என்.டீ. சில்வா அவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள செய்தி பாசிஸ இனவாத மஹிந்த குழுவிற்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்தவாறு ஆகிவிட்டது. அதனால் ராஜபக்ச அன் பிரதர்ஸ் அவரை குறிவைக்க இந்திய றோவின் உதவியை நாடியுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும்…