‘Uncategorized’

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழரின் வீட்டில் பலஇலட்சம் பெறுமதியான ஹிரோயின்!

Published on November 14, 2011-9:07 am · No Comments

தமிழ்நாடு கோடியாக்கரையில் உள்ள இலங்கை தமிழர் ஒருவரின் வீட்டிலிருந்து, 80 லட்சம் இந்திய ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த திவ்யநாதன் அல்பேர்ட் என்பவரது வீட்டில் போதை பொருள் இருப்பதாக, காவல்துறையினருக்கு அங்கு சோதனையிட்ட காவல்துறையினர் வீட்டு கூரைக்குள் 885 கிராம் ஹெராயின் போதைப் பொருளை கைப்பற்றினர்.
இதன் சர்வதேச மதிப்பு, 80 லட்சம் இந்திய ரூபாய் என கணிப்பிடப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப் பொருள் பை மீது ‘ஆப்கானிஸ்தான் 2005-2010′ என்று எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்- நல்லிணக்க ஆணைக்குழுவை நம்பமுடியாது

பாதுகாப்பு அச்சுறுத்தல், இரகசியத்தன்மை ஆகிய அடிப்படைக் காரணங்களைக் கருத்திற்கொண்டே கணிசமானளவு மக்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கூறவில்லை. அந்த ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த விதவைப் பெண்ணுக்கு சி.ஐ.டி. அழைப்பாணை விடுத்துள்ளதன் மூலம் இந்த விடயம் உலகுக்கு அம்பலமாகியுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கல்முனையைச் சேர்ந்த 45 வயதான விதவைப் பெண்ணான இரத்தினம் பூங்கோதை என்பவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு மீது சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. சாட்சிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நல்லிணக்க ஆணைக்குழு தவறிவிட்டதாகவும் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சாட்சிகளின் பாதுகாப்புக் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம். இப்போது நாம் சுட்டிக்காட்டிய விடயங்கள் சரியாகவே நடந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்

வேலைக்கு செல்லும் பெண்களின் உடல் உறுப்புக்களை திருடும் குவைத்!

Published on November 14, 2011-8:23 am · No Comments

குவைத் நாட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிக் கொண்டிருந்த போது மரணமடைந்த இலங்கை பெண்ணின் முக்கிய உடல் உறுப்புக்கள் திருடப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் கலாவேவ பிரதேசத்தை சேர்ந்த 28வயதுடைய ஸ்ரீமாலி குமாரிக்கா என்ற இளம் பெண் கடந்த மாதம் 31ம் திகதி குவைத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணியாற்றிக்கொண்டிருந்த போது திடீரென மரணமானார்.
இவருடைய சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்ட போது அவருடைய உடலில் இதயம், சிறுநீரகம் ஆகிய அவயவங்கள் இல்லாது காணப்பட்டதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் தயாபால தெரிவித்துள்ளார்.

அண்ணா திராவிடமுன்னேற்ற கழக பிரமுகர் சைதைதுரைசாமி அவர்கள் வழங்கிய செவ்வி

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

06.08.2011 அன்று ஒலிபரப்பாகிய sinhala programme පවුර (Pawura) உறவுப் பாலம் நிகழ்ச்சி

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய ஈரானியர்கள் நால்வர் கைது

இலங்கைக்குள் 16 கிலோகிராம் போதைப்பொருளை கொண்டுவர முயற்சித்த 4 ஈரான் நாட்டு பிரஜைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்களில் இருவர் எட்டு கிலோ 85 கிராம் நிறையுடைய போதைப்பொருளை கடந்த புதன்கிழமை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் விமான நிலையத்திலிருந்து தப்பிக்க முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது மெலும் எட்டு கிலோகிராம் போதைப்பொருளுடன் மற்றொரு ஈரானியர் கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர்கள் விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள ஆசனத்தில் ஒடுவதற்கு தயாரான நிலையில் அமர்ந்திருந்தனர்.

சுங்க திணைக்கள அதிகாரிகளை கண்டவுடன் ஓட முயற்சித்த போது பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் சுங்க திணைக்களத்தினர் அவர்களை பிடித்துள்ளனர்.

ஏற்கனவே சுங்க திணைக்கள அதிகாரிகள் இவர்களின் பைகளை சோதனையிட முற்பட்ட போது மறுத்துள்ளனர்.

இந்த மூன்று சந்தேக நபர்களிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இது தொடர்பில் ஆராய்வதற்கு இன்டர்போலின் உதவியையும் நாடியுள்ளதாக எஸ்.பி.ஜெயகொடி தெரிவித்தார்.

போதைப்பொருளை பரிமாற்றும் முகவர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றது

அரசியல் சமுக மேடையில் கனகசபை தேவ கட்சகன் அவர்கள் வழங்கியசெவ்வி(11.07/2010)

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

இலங்கை அரசின் இனஅழிப்பினை கண்டித்து கடிதம் அனுப்புவதற்கான இணையதள முகவரி

http://www.srilankacampaign.org/takeaction.htm

19 மணி நேரத்தில் 253 பாடல்கள் :உலக சாதனைக்காக நடந்தது

கொச்சி : உலக சாதனை நிகழ்த்துவதற்காக, 19 மணிநேரத்தில் 253 திரைப்பட பாடல்களை, மன்சூர் என்பவர் பாடத் துவங்கி சோர்வடைந்து, நிகழ்ச்சியைத் தொடரமுடியாமல் நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.உலக சாதனைகளை உள்ளடக்கிய கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக, 24 மணிநேரம் இடைவிடாமல் பாடுவது என்ற லட்சியத்துடன் களமிறங்கியவர் மன்சூர்.

மேலும்…

தமிழக ஆசிரியர் இருவருக்கு “மைக்ரோ சாப்ட்” விருது

நாகர்கோவில் ஆசிரியை மற்றும் நாட்றம்பள்ளி ஆசிரியர் “மைக்ரோ சாப்ட்” புதுமை ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்…