திருமண வாழ்த்து – பிரதீபன் & இந்துகா (15/11/2021)

தாயகத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை சேர்ந்த திருச்செல்வம் குணேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் பிரதீபன் அவர்களும், தாயகத்தில் கிளிநொச்சியை சேர்ந்த நீக்கிளஸ் சிவசக்தி தம்பதிகளின் செல்வப் புதல்வி இந்துகா அவர்களும் இன்று 15 ம் திகதி நவம்பர் மாதம் திங்கட்கிழமை திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ள பிரதீபன், இந்துகா தம்பதிகளை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு மாமா, அன்பு மாமி, அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார், பெரியப்பாமார், பெரியம்மாமார், மாமாமார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட பிரதீபன், இந்துகா தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் மணமகளின் அன்பு சகோதரர்கள்.

அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *