மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் பெரிய வெற்றியடைந்த படம் ‘திருஷ்யம்’. இதே படம் தெலுங்கில் ரீமேக் ஆனது. வெங்கடேஷ், மீனா நடித்த தெலுங்கு படத்தை நடிகை ஸ்ரீபிரியா இயக்கினார். தெலுங்கிலும் சக்கை போடு போட்டது ‘திருஷ்யம்’.
இதே படத்தை தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ‘பாபநாசம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் நடந்து வருகிறது. குற்றாலத்தில் தினமும் நல்ல மழை பெய்து வருவதால் படக்குழுவினர் சிரமப்பட்டு வருவதாக தகவல்கள் வந்தன.
மேலும் இந்த படம் நெல்லை வட்டார தமிழில் உருவாகி வருவதால் அந்த வட்டார தமிழை கமல்ஹாசனுக்கு கற்றுக்கொடுக்க எழுத்தாளர் சுகா நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி சுகா, பாடலாசிரியர் மதன் கார்க்கிக்கும் ஒருசில நெல்லை தமிழ் வட்டார சொற்களை கூறி, அவற்றை படத்தின் பாடலில் சேர்க்கவும் அறிவுறுத்தி வருகிறார்.
ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் கமல், கவுதமியுடன் ஆஷா சரத், கலாபவன் மணி, நிவேதா தாமஸ், ஆனந்த் மகாதேவன் உள்பட பலர் நடிக்கின்றனர்.
Leave a Reply