மாகாண சபை தேர்தல் : வாக்களிக்கும் முறை

மாகாண சபை தேர்தல் : வாக்களிக்கும் முறை

 
மாகாண சபை தேர்தல் : வாக்களிக்கும் முறை

தேர்தல்களை நாடத்தி பாராளுமன்றி;ற்கோ, மாகாண சபைகட்கோ, உள்ளுராட்சி சபைகட்கோ மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் முறை சனநாயக நாடுகளில் நடைபெறும்  ஓர் அரசியல் செயற்பாடாகும்..  தேர்தல்கள் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெற்று மாகாண சபைகட்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக 1988ஆம் ஆண்டின் 02 இலக்க மாகாணசபை தேர்தல் சட்டம் ஏற்புடைத்தாகின்றது. இச் சட்டம் மேலும் 1993 ஆம் ஆண்டு 7ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

1978ஆம் ஆண்டின் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் மூலம் விகிதாசார பிரதிநிதித்துவ முறை தேர்தலுக்கு அறிமுகமாகியது. ஆகவே மாகாண சபைகளுக்கும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் மூலமே பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

தேர்தல் மாவட்டம் 

மாகாணசபை தேர்தலின் போது மாகாணசபைகளுக்கு உட்படும் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலுமிருந்து தேர்தெடுக்கப்பட வேண்டிய பிரதிநிதிகள் அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்;தெடுக்கப்படுவர்.

மாகாணங்கள்

நிர்வாக பணிக்காக இலங்கை 09 மாகாணங்களாகவும். 25 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

அவையாவன:-

01.மேல்மாகணம்:- கொமும்பு, கம்பகா ,களுத்துறை மாவட்டங்கள்.

 

02.தென்மாகாணம்:-காலி, மாத்தளை, அம்பாந்தோட்டை மாவட்டங்கள்.

03. கிழக்கு மாகாணம்:-திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள்.

04. வட மாகணம்:-யாழ்ப்பாணம்  மன்னார் வவுனியா,  முல்லைத்திவு, கிளிநொச்சி மாவட்டங்கள்.

 

05.வடமத்திய மாகாணம்:-அனுராதபுரம், பொலநறுவை மாவட்டங்கள்

               

06.மத்திய மாகாணம்:-கண்டி,மாத்தளை, நுவரேலியா மாவட்டங்கள்

07.வடமேல் மாகாணம்;:-புத்தளம், குருநாகல் மாவட்டம்

 

08.சப்பிரகமுவ மாகாணம்:-கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்கள்

 

09.ஊவா மாகாணம்:-பதுளை, மொனராகலை மாவட்டம்.  

இவ்வாறு 09மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருந்த போதும் 08 மாகாணங்ளுக்கு மாத்திரமே மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டன. வடமாகாணசபைக்கான தேர்தல் இதுவரை (2012) இடம்பெறாமை காரணமாக வடமாகாண சபை அமைக்கப்படவில்லை .

2013, ஆம் ஆண்டு செப்ரம்பர் 21 ஆம் திகதி வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெற உள்ளமை, வட மாகாண சபை உருவாக்குவதற்குரிய ஆரம்ப அரசியல் நடவடிக்கையாகும்

மாகாணசபை உறுப்பினர்கள் .

ஒவ்வொரு மாகாண சபைக்கும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிகை அந்தந்த மாவட்டங்களின் சனத்தொகை, பரப்பளவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.

ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் 40,000 குடியிருப்பாளர்கட்கு ஒர் உறுப்பினர் என்ற வீதத்திலும், ஒவ்வொரு 1000 ச.கி;. மீற்றர் நிலப்பரப்பிற்கும் ஓர் உறுப்பினர் என்ற அடிப்படையிலும் தேர்வு இடம்பெறும். ஒவ்வொரு மாகாண சபைக்கும் தேர்த்தெடுக்கப்படுபவர் எண்ணிக்கை சமமானதாக அமையாது. ஒவ்வொரு மாகாண சபையின் நிர்வாக எல்லைக்குப்பட்ட சகல மாவட்டங்களினதும் சனத்தொகை, பரப்பளவு அடிப்படையில் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் விகிதா சார முறைப்படி சகல உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்ட பின், குறித்த மாகாண சபை உள்ளடக்கும் மாவட்டங்களிலும் கூடுதலான வாக்குகளைப் பெற்ற அரசியற் கட்சி ஃ சுயேச்சைக் குழுவிற்கு இரண்டு ஆசனங்கள் போனஸ் ஆகக் கிடைக்கும். இவ்வாறு இரு ஆசனங்களும் வேட்புமனுப் பத்திரத்தில் வேட்;பாளர் பட்டியலில் இடம்பெறாத வேறு இருவரின் பெயர்கள் மூலம் தெரிவுசெய்யப்படும்.

மாகாண சபை உறுப்பினர் எண்ணிக்கை.

பல காலமாக இழுத்தடிக்கப்பட்ட வடமாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 16 பேரும் , மன்னார் மாவட்டத்திலிருந்து 05 பேரும்,முலலைத்தீவு மாவட்டத்திலிருந்து 5 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 04 பேரும் வவுனியா மக்கள் வாக்களிப்பின் முலம் 06 பேரும் தெரிவு செய்யப்படுவர். மாகாணத்தின் அதிகூடிய வாக்குகளைப் பெறும் அரசியல் கட்சிக்கு மேலதிகமாக 02 பிரதி நிதித்துவங்கள் வழங்கப்படும.; இலங்கையில் வடமாகாண சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 38 ஆகும்.

வாக்களிக்கும் முறை 

தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொருவரினதும் உரிமையாகும.; ஆகவே அளிக்கப்படும் வாக்குகள் ஒவ்வொன்றும் எதுவித பிழைகளுமின்றி சரியாக வாக்களிக்கப்பட வேண்டியது எமது பொறுப்பாகும். அளிக்கப்படும் பெறுமதி மிக்க வாக்குகள் வீணடிக்கப்படாது இருத்தல் அவசியம். மாகாண சபைக்கான தேர்தலில் வாக்களிக்கும் முறைமை பற்றிய  தெளிவான  அறிவை ஒவ்வொரும், குறிப்பாக பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும். வாக்களிக்கும். முறைமை பற்றிய தெளிவு அறிய வேண்டிய ஆர்வம் இன்மையால் பல வாக்குகள் செல்லுபடியற்றதாகிய வரலாறு உண்டு.

வாக்குச் சீட்டு:

வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது உங்கள் ஆள் அடையாளத்தை நிரூபிப்பதற்கான தேசிய அடையாளஅட்டை, தற்காலிக அடையாள அட்டை, வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம். போன்றவற்றைத் தவறாது எடுத்துச் செல்ல வேண்டும்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் வாக்குச் சீட்டில் போட்டியிடும் கட்சி ஃகுழுக்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்

மாதிரி வாக்குச் சீட்டு:

கட்சி                    சின்னம்                புள்ளடி

1…………

2………….

3………….

இப்படியாக வாக்குச் சீட்டில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்கள் ‘கட்சி’ என்று போடப்பட்ட இடத்தில் குறிக்கப்பட்டிருக்கும். அதற்கெதிரே கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும் ஆகவே நீங்கள் தெரிவு செய்யும் கட்சிக்கு எதிரே சரியாக புள்ளடி இட வேண்டும். ஒரு வாக்காளர் தான் தெரிவு செய்யும் ஒரு  கட்சியின சின்னத்திற்கு எதிரே மட்டு;ம் புள்ளடி இட வேண்டும் அத்துடன் அக்கட்சி சார்பாக போட்டியிடும் மூவரின் இலக்கத்திற்கு மேல் புள்ளடி இட வேண்டும். நீங்கள் விருப்பு வாக்கை அளிக்கவுள்ள மூவரின் தெரிவு இலக்கங்கள் என்பவற்றை முதற்கூட்டியே தெளிவாக தெரிந்து வைத்திருப்பதன் மூலம், தேர்தல் தினத்தில் ஏற்படும் தடுமாற்றத்தை தவிர்க்க முடியும்.

ஒரு வாக்காளர் ஒரு கட்சியைத் தெரிவு செய்து அவர்கட்குரிய சின்னத்திற்கு எதிரே புள்ளடியிட வேண்டும், இடப்படும் புள்ளடி பெட்டியின் கோடுகளுள் முட்டாதவாறு இடப்பட வேண்டும.;

ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட கட்சியின் சின்னங்களில் புள்ளடி இட்டால் அச்சீட்டு நிராகரிக்கப்படும்,

விருப்புவாக்கை பதிவு செய்தல்,

மாகாண சபைத் தேர்;தலில் ஒருவர் ஒரு குறித்த அரசியல் கட்சியிலோ, குழுவிலோ இணைந்து போட்டியிடும் மூவருக்கு தனது விருப்பு வாக்கை அளிக்க முடியும். குறித்த மூன்று விருப்பு வாக்குகளையும் ஒருவருக்கு ஒன்று என்ற ரீதியில் தெரிவு செய்யும் மூவருக்கு வழங்க முடியும்.

அதாவது அரசியல் கட்சியின் ஒரு சின்னத்திற்கு மட்டும் தனது வாக்கை புள்ளடியிட்டு பதித்த பின் அடுத்ததாக அதே சின்னத்தில் போட்டியிடும் மூவரைத் தெரிவு செய்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்கங்களில் புள்ளடி இடவேண்டும். நீங்கள் தெரிவு செய்யும் கட்சி, அவர்களது சின்னம், விருப்பு வாக்களிப்பவர்கள் மூவரை தெரிவாக கொள்ளாதவிடத்து ஒருவருக்கோ, அல்லது இருவருக்கோ அவர்களது இலக்கத்திற்கு எதிரே புள்ளடி இட முடியும். இதுவும் முறையான வாக்களிப்பில் அடங்கும். மூன்று பேரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல.

ஆனால் ஒன்றிற்கு மேற்பட்ட கட்சிச் சின்னத்தவருக்குப் புள்ளடியிட்டால் அவ்வாக்கு செல்லுபடி அற்றதாகும்.

அதேபோல விருப்புவாக்கு இலக்கங்கள் மூன்றிற்கு அதிகமாக புள்ளடியிட்டாலும் விருப்பு வாக்குகள் செல்லுபடியற்றதாகிவிடும். ஆனால் ஒரு சின்னத்திற்குப் புள்ளடியிட்டு, விருப்பு வாக்கில் மூன்றிற்கு மேற்பட்ட இலக்கங்கட்கு புள்ளடியிட்டால் கட்சியின் சின்னத்திற்குரிய வாக்கு ஏற்கப்படும். விருப்பு வாக்கு ஏற்கப்படமாட்டாது.

மாகாணசபை தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றிய விளக்கங்கள் இக்கையேட்டில் கூறப்பட்டுள்ளன. இவ்வழிமுறைகளைப் பின்பற்றி உரிய நேரத்தில் வாக்குச் சாவடிகட்கு சென்று முறையாக வாக்களித்து தங்கள் பிரதேசத்திற்குரிய அரசியல் பிரதிநிதிகளை வடமாகாண சபைக்குத் தெரிவு செய்வதில் உங்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயனுள்ளதாக அமைத்துக்கொண்டு வாக்களிக்கப் பின்நிற்காது பொறுப்புடன் வாக்களிப்பில் கலந்துகொள்வது உங்கள் கடமையும், பொறுப்புமாகும்.

 

  1. kopal

    இரண்டு ஆசனங்கள் போனஸ் ஆகக் கிடைக்கும். இவ்வாறு இரு ஆசனங்களும் வேட்புமனுப் பத்திரத்தில் வேட்;பாளர் பட்டியலில் இடம்பெறாத வேறு இருவரின் பெயர்கள் மூலம் தெரிவுசெய்யப்படும்.
    போனஸ் ஆசனங்கள் இரண்டும், தேர்தலில் போட்டியிடாதவர்களுக்கு வழங்கப்படும் என்று எழுதப்பட்டுள்ளது. இது சரியானதா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *