காயக்குழி காட்டிற்குள் மரங்களுக்கு கீழ் இருந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு ரி.ஆர்.ரி உதவி

மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எந்த ஒரு வசதிகளுமற்ற காட்டுப்பகுதியான காயக்குழி எனும் இடத்தில் வசித்து வருகின்றனர்.  இங்குள்ள மாணவர்கள் மரங்களுக்கு கீழேயே கல்வி கற்கின்றனர். எந்த ஒரு அடிப்படை வசதிகள் கூட அந்த மாணவர்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலி நேயர்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அந்த மாணவர்களுக்கு கையளித்தார்.

தற்போது அப்பகுதி மக்கள் மரங்களை வெட்டி கம்புகளை கொண்டு சிறு கொட்டில்களை அமைத்து வருகின்றனர். அரசாங்கம் இந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் அடந்த காட்டிற்குள் மரங்களுக்கு கீழ் இருந்தே மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் என அங்கு நேரில் சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

2 Responses

  1. jeevan

    உதவி செய்த அத்தனை உறவுகளுக்கும் இதய பூர்வமான நன்றிகள் அத்துடன் உறவுகளை ஒன்றுபடுத்தி உணர்வுள்ள மனிதர்களை அடையாளம் காட்டி சிறந்த முறையில் TRT வானொலி செயற்படுகிறது.எமது வானொலி TRT நெஞ்சார வாழ்த்துகிறேன். எம் தமிழ் இனம் எல்லா இனங்களை போல வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    என்றும் அன்புடன் உங்கள் ஜீவன்

  2. jeevan

    நன்றி சுதன் சர்மா ஐயா அவைகளே அத்தனை விடயத்தையும் தெளிவாக குறிப்பு அறிந்தது உண்மை.பண்புடன் தெளிவு படுத்தி இருந்தீர்கள்.மீண்டும் ஒருமுறை நன்றி.உங்களை போன்றவர்கள் எங்கள் வானொலியில் பதிவு செய்தீர்கள்.முற்றும் அறிந்தவர் பொல பல மக்கள் பேசுவர்,தான் பிடித்த விலங்குக்கு மூன்று கால் என்பர்.ஆனால் அன்பு பண்பு அத்தனைக்கும் ஒரு விடை கிட்டைக்கும்.ஆனால் பண்பு மிக்க உங்கள் சொல்லாற்றல் பாதம் பணிந்து,சமுதாயம் சார்ந்த சிந்தனைக்கு வாழ்த்து கூறி எங்கள் வானொலி வளம் பெற வாழ்த்திய உங்களுக்கும் உளம் சார்ந்த நன்றிகள். என்றும் அன்புடன் உங்கள் ஜீவன்.

Leave a Reply

Your email address will not be published.