பொதுமக்கள் வாக்களிப்பதன்மூலம் ஜெர்மன் ஜனாதிபதி nதிரவு செய்யப்படுவதில்லை.
அதற்கு பதில் வாக்கு மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக மாத்திரம் விசேட குழு
ஒன்று அமைக்கப்படும்.
ஜெர்மன் அரசமைப்பில் சமஷ;டி மாநாடு என்பது விசேடமான ஒரு (அசெம்பிளி) அமைப்பு
ஆகும்..அந்த அமைப்பு ஜனாதிபதியைத் தெரிவு
செய்வதற்காக உருவாக்கப்படுவதாகும்.
இந்த அமைப்பில் ஜெர்மன் பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களும் மற்றும்
ஜெர்மனில் உள்ள பதினாறு மாநிலங்களிலிருந்து தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளும்
அங்கம் வகிப்பர்
பாராளுமன்ற உறுப்பினர்கள் 622 மற்றும் பதினாறு மாநிலங்களிலிருந்து தெரிவு
செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 622. மொத்தமாக 1244 உறுப்பினர்கள்
அசெம்பிளி என்றழைக்கப்படும் அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பர். ஓவ்வொரு
மாநிலமும் அதன் சனத்தொகைக்கு ஏற்ப உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்ப
அனுமதிக்கப்படும்;. மாநில உறுப்பினர்கள் அரசியல்வாதிகளாக இருக்கமாட்டார்கள்.
அவர்கள் பொதுப்பிரமுகர்கள் மற்றும் புகழ் வாய்ந்தவர்களாக இருப்பர்.
வழமையாக சமஷ;டி அசெம்பிளி பாரம்பரியமாக மே மாதம் 23 ஆம் திகதி கூடும்.
அத்தினம் ஜெர்மன் சமஷ;டிக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட தினமாகும். ஆத்துடன்
அத்தினத்தில் தான் 1949 இல் அடிப்படைச்சட்டமான ஜெர்மன் அரசமைப்பு
அறிமுகப்படுத்தப்பட்ட தினமுமாகும். பதவியிலிருக்கும் ஒரு ஜனாதிபதியின்
பதவிக்காலம் முடிவடைவதற்கு குறைந்தது 30 தினங்களுக்கு முன்பு இந்த அசெம்பிளி கூடும்.
ஜெர்மன் பாராளுமன்றத்தின் சபாநாயகர் இந்த அசெம்பிளியின் கூட்டத்திற்கு தலைமை
வகிப்பார். ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அவர் தனது பதவியை
ஏற்றுக்கொண்டவுடன் இந்த அசெம்பிளி கலைக்கப்பட்டு விடும்.
போட்டியிடும் வேட்பாளர்கள் ஆகக்குறைந்தது 40 வயதினராக இருக்க
வேண்டும்.அசெம்பிளியின் ஒரு உறுப்பினரால் அவர் நியமிக்கப்பட வேண்டும்.
வேட்பாளர்களை அரசியல் கட்சி அல்லது பல கட்சிகள் நியமிக்கலாம். ஜனாதிபதி
பதவிக்கு போட்டியிபவர்கள் தேர்தலுக்கு முன்னர் பிரசாரங்களில் வழமையாக
ஈடுபடமாட்டார்கள். முன்கூட்டிய விவாதமின்றி இரகசிய வாக்கெடுப்பு மூலம் ஜனாதபதி
தெரிவு செய்யப்படுவார்.முதல் சுற்றில் பூரண பெரும்பான்மை ஒருவர் பெறாது விட்டால்
இரண்டாவது வாக்கெடுப்பு நடைபெறும். அதிலும் முடிவு கிடைக்காவிட்டால் மூன்றாவது
வாக்கெப்பு நடைபெறும். மூன்றாவது சுற்றில் சாதாரண பெரும்பான்மை பெறவேண்டும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று வாக்கெடுப்பின்பொது புதிய வேட்பாளர்களை
அறிமுகம் செய்யலாம்.ஜூன் 30 தேர்தலில் பூரண பெரும்பான்மை பெற ஒரு வேட்பாளர்
623 வாக்குகளை பெற வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடைய கட்சி
ஒன்றின் வேட்பாளரே வெற்றி பெறும் வாய்ப்பு கூடுதலாக பெற்றவராகின்றார். தெரிவு
செய்யப்பட்டவர் பதவியை ஏற்பது குறித்து முடிவை தேர்தல் முடிந்து இரண்டு
தினங்களுக்குள் அறிவிக்க வேண்டும். எவ்வாறாயினும் ஜனாதபிதியா தெரிவு
செய்யப்பட்ட எவரும் இது வரை இவ்வாறு அறிவிக்கவில்லை. ஜனாதபதி பதவிக்காலம்
ஐநது ஆண்டுகள் ஆகும். ஜனாதபிதி ஒருவர் இரு பதவிக்காலம் பதவியில் இருக்கலாம்.
செப்டம்பர் 12 ஆம் திகதி 1949 ஆம் ஆண்டு முதலாவது அசெம்பிளி பொன் நகரில்
சந்தித்தது. 1954 ஆம் ஆண்டு அசெம்பிளி சந்திப்பது மேற்கு ஜெர்மனிக்கு
நகர்த்தப்பட்டது. 1969 ஆம் ஆண்டு வரை அசமெ;பிளி மேற்டகு ஜெர்மனியில்
சந்தித்து வந்தது. 1974 ஆம் ஆண்டிலிருந்து 1989 ஆம் ஆண்டு வரை பொன் நகரில்
மீண்டும் அசெம்பிளி கூடியது. 1994 இலிருந்து பெர்லினில் பாராளுமன்றக்கட்டடத்தில்
அசெம்பிளி கூடுகிறது
Leave a Reply