இஸ்லாமிய சட்டத்தின் கீழ் நாட்டில் சில சிவில் வழக்குகளை

விசாரிக்க ஷhரிய நீதிமன்றங்களுக்கு ஜேர்மனி அனுமதி வழங்கலாம் என்று

Rhineland-Palatinate

(றைன்லந்து-பலட்டினேற் )மாநிலத்தின் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது ஆத்திரத்தை கிளறியுள்ளது. இரு தரப்பும் சம்மதிக்கும் பட்சத்தில் ஷரியா

நீதிமன்றங்களின் முன் சிவில் வழக்குகளை விசாரிக்க தாம் அனுமதி வழங்க தயாராக

இருப்பதாகவும் மத்திய இடதுசாரி கட்சியான சமூக ஜனநாயகக்கட்சியின்

உறுப்பினரானஜோசென் ஹார்ட்ஓப் பெர்லின் பத்திரிகை ஒன்றுக்கு

தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஷரியா நீதிமன்றங்கள் கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்கு

அனுமதிக்கப்படமாட்டாது என்றும் நவீன முறையிலான ஷhரியா சட்டத்தை மாத்திரமே

தாம் ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கற்காலத்தை நான் ஏற்கமாட்டேன். கற்களால் தாக்குவது மனித உரிமை மீறலாகும்

என்றும் அவர் தெரிவித்தார்.

பதவி விலகும்படி பழமைவாதிகளிடமிருந்து அவருக்கு நெருக்குதல் ஆரம்பித்துள்ளது.

hரிய சட்டம் குரூரத்தனமானதும் மனிதத்தன்மையற்றதுமாகும் என்று மத்திய வலது சாரி

கிறிஸ்தவ சோஷலிச யூனியன் சட்ட நிபுணர் ஸ்டீபன் மேயர் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் இவ்வாறு நினைப்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றாகும் என்றும்

அவர் குறிப்பிட்டார்.

ஜேர்மனியில் சமாந்தரமான நீதித்துறைக்கு என்பதற்கு எதிரான கருத்து அது என்று

சமஷ;டி நீதி அமைச்சு எச்சரித்துள்ளது.

ஆனால் ஜேர்மனியில் உள்ள முஸ்லிம்கள் மத்திய கவுன்சில் மாநில நீதி

அமைச்சரின் கருத்தை வரவேற்றுள்ளது.

!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.