திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள்

சென்னையில் இருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 5 நிமிடம்
முன்னதாகவே

மதியம் 2 மணிக்கு திருச்சி விமான நிலைய ஓடு தளத்தில் இறங்கிக்
கொண்டிருந்தது.

அதே நேரத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டு
சென்றது. அப்போது 2 விமானங்களும் ஒரே நேரத்தில் ஓடு தள பாதையில் மோதுவது போல்
அருகருகே சென்றன.
இதனை விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் உடனடியாக பார்த்து 2
விமானிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். விமானிகள் சமயோசிதமாக செயல்பட்டதால் எந்தவித
அசம்பாவிதமும் ஏற்படாமல் 2 விமானங்களும் ஒன்றுடன் ஒன்று உரசாமல் சென்றன.
இந்த சம்பவத்தால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 170
பயணிகளும், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30 பயணிகள் என மொத்தம் 200
பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

2 Responses

  1. Ramesh Manivasagam

    இறைவனுக்கு நன்றி விமான ஓட்டிகளுக்கு நன்றி கட்டுப்பாட்டு அலுவலகத்தினருக்கும் நன்றி ,
    கண்ணும் கருத்திலுமிருந்து தவறியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

  2. ஜீவன்

    எம்மினத்துக்காக சிந்திபவர்கள் சிலராக இருந்தாலும்.உணர்புவமாக சிந்தித்தால் மட்டும் போதாது ஒவ்வொரு நகர்வுகளும் அரசியல் ரீதியாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.ஒவ்வொரு கருத்துகளும் பக்க விளைவுகள் அற்றதாகவும் அல்லது பக்கவிளைவுகளுக்கும் முகம் கொடுக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.
    என்னும் ஒரு விடயம் விடுதலைக்காக பாடுபட்டவர்களோடு புரிந்துர்வோடு நடந்து கொள்ளவேண்டும் புதியவர்கள் என்று புறம் தள்ள ஒரு போதும் அனுமதிக்க கூடாது.பழையவர்கள் என்று பணம் திரட்டவும் அனுமதிக்க கூடாது.பழையவர்களில் இன்றும் விடுதலையை சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள்.அவர்களோடு இணைந்து இளையோரை முன் நிறுத்தி ஆக்க பூர்வமான அடுத்த நகர்வுகளை நகர்த்தவேண்டும்.இவ்வாறாக ஒன்றிணைந்தால் என்னையும் இணைத்துகொள்ளுங்கள்.என்னால் முடிந்ததை இதய பூர்வமாக ஒத்துழைப்பேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *