அன்பரசன், உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழி்ப்புத் துறை அதிகாரிகள் ரெய்ட்

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் தா. மோ. அன்பரசனின் வீட்டுக்கு இன்று காலை 7 மணிக்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அங்கு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக முன்னாள் அமைச்சர் தா. மோ. அன்பரசனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று குன்றத்தூரில் உள்ள அவரது தம்பி, சகோதரிகள் வீட்டிலும் சோதனை நடந்து கொண்டிருக்கிறது.

மேலும் ராமாவரத்தில் உள்ள உறவினர் வீடு, துரைப்பாக்கத்தில் உள்ள அன்பரசனின் நண்பர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள அன்பரசனின் சம்பந்தி வீட்டிலும் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.

மொத்தம் 7 இடங்களில் 100 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த திமுக ஆட்சியில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தா.மோ.அன்பரசன் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். இவர் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் தான் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வீடு, அவரது மகன்கள், தம்பிகள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் உள்பட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.