மஹிந்தவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சம்பவத்தின் பின்னணியில் அனைத்துலக மன்னிப்புச் சபை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சம்பவத்தின் பின்னணியில் அனைத்துலக மன்னிப்புச்சபை செயற்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அனைத்துலக மன்னிப்புச் சபைக்கும், வழக்குத் தாக்கல் செய்த அமெரிக்கப் பல்கலைக்கழகம் என்ற அரச சார்பற்ற நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் சட்டத்தரணி அலி புட்மான் மற்றும் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் ஆகியோர் வழக்கைத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கேணல் ரமேஸின் மனைவியினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் இதுவரையில் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.

இதேவேளை, மேஜர் ஜெனரல் சாவேந்திரா சில்வாவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை குறித்து இன்று பதில் அனுப்பி வைக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திவயின மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *