கூகுளில் மொபைல் கட்டணதளம் அறிமுகம்

posted in: வர்த்தகம் | 0

நியூயார்க் : கூகுள் வாலட் என்னும் மொபைல் மூலம் கட்டணம் செலுத்தும் சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.


இந்திய புதிய சேவை நடப்பு ஆண்டின் மே மாதம் முதல் செயல்படும் எனவும், முதல்கட்டமாக நியூஎக்ஸ் எஸ் 4ஜி மொபைல்களில் மட்டும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கூகுள் வாலட் மூலம், கூகுள் பிரிபெய்டு கார்டு உள்ளிட்ட அனைத்து கிரெடிட் கார்களையும் பயன்படுத்தி மொபைல் மூலம் கட்ட‌ணங்களை‌ செலுத்தலாம். ஏற்கனவே கூகுள் வாலட் வசதி பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த ஆண்டின் இறுதியில் கூகுள் பிரிபெய்டு கார்டுக்கு 10 அமெரிக்க டாலர்கள் இலவச போனசாக வழங்கப்பட உள்ளது. வருங்காலத்தில் விசா, டிஸ்கவர், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட கார்டுகளும் கூகுள் வாலட் சேவையில் இணைக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.