2 சூரியன்களை சுற்றும் கோள்

ஸ்டார் வார்ஸ்’ ஆங்கில படத்தில் வருவது போல் இரட்டை சூரியன்களை, ஒரே கோள் சுற்றி வருவதை, அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கெப்லர் தொலைநோக்கி: புவியைப் போன்று விண்ணில் இருக்கும் கோள்களை ஆராய்ச்சி செய்ய, நாசா ஆராய்ச்சி மையத்தால் கெப்லர் என்ற விண்வெளித் தொலைநோக்கி விண்கலம் 2009ஆம் ஆண்டு மார்ச் 6ம் தேதி அனுப்பப்பட்டது. ஜெர்மனியின் புகழ்பெற்ற வானியலாளர் ஜொகான்ஸ் கெப்லர் நினைவாக இப்பெயர் வைக்கப்பட்டது.

“டாட்டூயின்’: ஒரு கிரகம் இரட்டை நட்சத்திரங்களை சுற்றி வருகிறது என வானியல் ஆய்வாளர்கள் எழுதிய கடந்த கால குறிப்புகள் உள்ளன. இவர்கள் “டாட்டூயின்’ என இக்கிரகத்திற்கு பெயரிட்டிருந்தனர். இந்த பெயர், ஸ்டார் வார்ஸ் சினிமாவிலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது தான் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் புதிய கிரகத்திற்கு “கெப்லர் 16பி’ என பெயரிட்டுள்ளனர். இந்த கிரகம், இரண்டு சூரியன்களை சுற்றி வருவதால், ஒரு நாளில் இரண்டு சூரிய மறைவை கொண்டது. சனியைப் போல், இங்கும் மனிதர்கள் உயிர் வாழ முடியாது. இந்த கிரகம் பூமியிலிருந்து 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இங்குள்ள சூரியன்கள், நமது சூரியனை விட அளவில் சிறியவை. இந்த கிரகத்திற்கு மேற்பரப்பு வெப்பநிலை 100 முதல் 150 பாரன்ஹீட் (-73 முதல் – 101 செல்சியஸ்).

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.