வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல்., எச்சரிக்கை

posted in: வர்த்தகம் | 0

சென்னை:”அறிமுகமில்லாத சர்வதேச அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்’ என, வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல்., றிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில், 65 லட்சம் வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல்., கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, பி.எஸ்.என்.எல்., மொபைல் போன், “ப்ரீபெய்டு’ வாடிக்கையாளர்களுக்கு, அறிமுகமில்லாத மொபைல் எண்களிலிருந்து சர்வதேச அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.”மிஸ்டு கால்’ மற்றும் அழைப்புகளாக வரும், “இந்த சர்வதேச அழைப்புகளால், தங்கள் ப்ரீபெய்டு கணக்கில் உள்ள கையிருப்பு தொகை 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை குறைந்து விடுகிறது’ என, வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் பி.எஸ்.என்.எல்.,க்கு வந்தவண்ணம் உள்ளன. இதையடுத்து, “வாடிக்கையாளர்கள், “+00239′ என்ற எண் மற்றும் அறிமுகமில்லாத சர்வதேச எண்ணிலிருந்து வரும் அழைப்புகள், “மிஸ்டு கால்’களுக்கு பதிலளிக்க வேண்டாம்’ என, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறும்போது, “சர்வதேச அழைப்பால், பி.எஸ்.என்.எல்., மொபைல் போன், “ப்ரீபெய்டு’ வாடிக்கையாளர்கள் கணக்கில் உள்ள கையிருப்புத் தொகை குறைந்து விடுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இந்த பிரச்னையை தவிர்க்க, சர்வதேச எண்ணுக்கு வாடிக்கையாளர்கள் பதிலளிக்கும் வசதியை தடை செய்துள்ளோம். இது குறித்து, வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலமும் தகவல் தெரிவித்து வருகிறோம்’ என்றார். ஏற்கனவே, இது போன்ற சர்வதேச அழைப்புகள் குறித்து ஏராளமான புகார்கள் பி.எஸ்.என்.எல்.,க்கு வந்துள்ளன. ஆனாலும், அந்த அழைப்புகள் எங்கிருந்து வருகின்றன என்பதை, பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தால் கண்டுபிடிக்க முடியாதது குறித்து வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.