ஏப்ரல் – ஜூன் மாதங்களில் உலகளவில் தங்கம் விற்பனை ரூ.2 லட்சம்கோடியை தாண்டியது

posted in: வர்த்தகம் | 0

புதுடில்லி:நடப்பு காலண்டர் ஆண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில், சர்வதேச அளவில் தங்கம் விற்பனை, 2 லட்சத்து 250கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தங்கத் திற்கா னதேவை அதிகரித்து வருவதால், உலகளவில் தங்க விற்பனை வளர்ச்சி கண்டு வருவதாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கடன் மற்றும் பொருளாதார நெருக்கடியால், சர்வதேச அளவில், பங்குச் சந்தைகளுக்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் சென்ற 18ம்தேதி, வியாழக்கிழமையன்று , ஒரு சவரன் ஆபரணத் தங்கம், முதன் முறையாக 20 ஆயிரம் ரூபாயை தாண்டியது. வெள்ளியன்று சென்னையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 20 ஆயிரத்து 928 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையானது.இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் தங்கத்திற்கானதேவை அதிக அளவில் உள்ளது. இதனால், சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், உலகளாவிய தங்கத்தின்தேவை, மதிப்பின் அடிப்படையில் சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, 5 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கம் விலை உயர்ந்துள்ளதால், அதன் பயன்பாடு, 17 சதவீதம் குறைந்து 919.80 டன்னாக சரிவடைந்துள்ளது.

அதே சமயம், இதே காலத்தில் இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்திற்கானதேவை மதிப்பின் அடிப்படையின் முறையே, 38 மற்றும் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.பல நாடுகளின் மத்திய வங்கிகள், நிதி இடர்பாடுகளை எதிர்கொள்ளக்கூடிய, பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதி, அவற்றை வாங்கி குவித்து வருகின்றன. சென்ற ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், இவ்வங்கிகள், முந்தைய ஆண்டு இதே காலத்தை விட, 4 மடங்கு அதிகமாக, அதாவது 69.4 டன் தங்கத்தை வாங்கியுள்ளன.

அதே சமயம், பொருளாதார வளர்ச்சியாலும், பண்டிகை காலம் வர உள்ளதாலும், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தங்கத்திற்கானதேவை அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. நடப்பு காலண்டர் ஆண்டில், இதுவரை சர்வதேச அளவில் தங்கத்தின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம், இதே காலத்தில் அமெரிக்க பங்குச் சந்தைகளில், புளு சிப் நிறுவனப் பங்குகளின் விலை 15 சதவீதம் சரிவடைந்தது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *