அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : கருணாநிதி

posted in: தமிழ்நாடு | 0

சென்னை : தமிழக அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கு ரூ.1000 சிறப்பு போனஸ் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரூ.3000 உச்ச வரம்பிற்கு உட்பட்டு இந்த போனஸ் வழங்கப்பட உள்ளது. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளது.முன்னாள் கிராம அலுவலர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.500 பொங்கல் போனஸாக வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.277 கோடி செலவாகும் எனவும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *