அமெரிக்காவில் செவிலியர் படிப்புடன் வேலை

சென்னை,​​ மார்ச் 24:​ அமெரிக்காவில் செவிலியர் படிப்புடன் வேலை பார்ப்பதற்கான புதிய ஒப்பந்தத்தில் சவீதா பல்கலைக்கழகம் கையெழுத்திட்டுள்ளது.

இதன்படி,​​ இப்படிப்பில் சேருவோர்,​​ சவீதா பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பி.எஸ்சி நர்சிங் படிக்க வேண்டும்.​ அதற்கடுத்த இரண்டு ஆண்டுகள் அமெரிக்க பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும்.

மூன்று ஆண்டு முடிவில் மாணவர்களுக்கு ‘அசோஸியேட் சயின்ஸ்’ என்ற பட்டம் வழங்கப்படும்.​ இந்த பட்டத்தைக் கொண்டு மாணவர்கள் பகுதி நேர வேலையில் ஈடுபட்டு தங்கள் நான்காவது ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை தாங்களை செலுத்திக் கொள்ளலாம்.

நான்காவது ஆண்டு முடிவில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சார்பில் பிஎஸ்சி நர்சிங் பட்டம் வழங்கப்படும்.​ நான்காண்டு முடிவில் அமெரிக்காவில் பதிவு பெற்ற செவிலியராக பணியாற்றலாம்.​ அமெரிக்காவில் பதிவு பெற்ற செவிலியர்களுக்கு மாதம் சுமார் 2.4 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.