கிராமத்தில் பணியாற்ற டாக்டர்களுக்கு விருப்பமில்லை: குலாம் நபி ஆஸôத்

கிராமத்தில் பணியாற்ற டாக்டர்களுக்கு விருப்பமில்லை; அவர்களை அங்கு பணி அமர்த்துவது மிகக் கடினமான விஷயமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆஸôத் தெரிவித்துள்ளார்.

கிராமத்தில் பணியாற்றுவதற்கு பலரை உருவாக்குவதற்காக புதிய இளநிலை மருத்துவப் படிப்பை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த படிப்பை அறிமுகப்படுத்த இந்திய மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கிராமப்புற மருத்துவ படிப்பு கொண்டு வருவதால் எம்.பி.பி.எஸ் படித்த டாக்டர்களுக்கு பிரச்னை ஏற்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இது தொடர்பாக மருத்துவர்கள் சங்கத்தினர் தில்லியில் புதன்கிழமை, ஆஸôத்தை சந்தித்துப் பேசினர்.

அப்போது புதிய படிப்பு பட்டப்படிப்பாக இல்லாமல் பட்டயப்படிப்பாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

“தற்போதுள்ள டாக்டர்கள் கிராமத்தில் சென்று பணியாற்ற விரும்புவது இல்லை. பல கிராமங்களில் செவிலியர்கள் தான் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளனர்’ என்று ஆஸôத் அவர்களிடம் கூறினார்.

மேலும் புதிய மருத்துவப் படிப்பால் எம்.பி.பி.எஸ். டாக்டர்களுக்கு பிரச்னை ஏற்படாது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.