பயங்கரவாதத்தை தடுக்க தவறியது பாக்., : அந்தோணி

பனாஜி : பயங்கரவாதத்தை தடுக்க பாகிஸ்தான் தவறி விட்டதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார். கோவாவில் இந்திய கடலோர காவல் படையில் விஸ்வாஸ்த் என்ற கண்காணிப்பு கப்பல் சேவையை தொடக்கி வைத்து அவர் இதை அறிவித்தார்.

பாகிஸ்த‌ானில் 42 பயங்கரவாத முகாம்கள் இருக்கின்றன அவற்றில் பெரும்பாலனவை இன்னும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றை அழிக்க பாகிஸ்தான் எந்‌த வித ஸ்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தப்படப் வோவதில்லை. இவ்வாறு அந்தோணி கூறினார்.

பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தான் முயற்சி எடுத்தது என சுட்டிக் காட்டிய அவர் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாத பட்சத்தில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை தொடர்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என தெரிவித்தார். அண்மை காலமாக காஷ்மீரில் அமைதி நிலவுவதை பொறுக்க முடியாமல் தான் பயங்கரவாதிகள் மீண்டும் சதி வேலைகளில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.