‘கேப்டன் [^] டிவி [^]’ சோதனை ஒளிபரப்பு தொடங்கியது

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் கேப்டன் டிவி தனது சோதனை ஒளிபரப்பை கடந்த 15ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது.

விஜயகாத்தின் மைத்துனர் எல்.கே.சுதிஷ் நிர்வாகத்தில், சித்திரைத் திருநாளான ஏப்ரல் 14ம் தேதி 24 மணி நேர நிகழ்ச்சிகள் முழு வீச்சில் ஒளிபரப்பாக உள்ளன.

தற்போது சோதனை ஓட்டமாக சினிமா பாடல்கள், கட்சி விளம்பரஙகள் போன்றவற்றை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

ஏப்ரல் 14ம் தேதிக்கு முதல் வார நாட்களில் தொடர்கள், திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகலில் திரைப்படங்கள், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பிறமொழிப் படங்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

சன் மற்றும் கலைஞர் டிவிக்களுக்கு போட்டியாக பல புதிய படங்களை மடக்க இப்போதே முன்னணி சினிமா நட்சத்திரங்களுடன் ‘கேப்டன் டீம்’ பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறதாம்.

‘நான்காவது தூணில் மூன்றாவது கண்!- உள்ளது உள்ளபடி இனி கேப்டன் செய்திகளில் மட்டுமே!’ என்ற ‘பஞ்ச்’ வாசகங்களுடன் கேப்டன் டிவி தனது ஒளிபரப்பை சோதனை ஓட்டத்தை தொடங்கியுள்ளது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.