தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 700 இடங்கள் அதிகரிக்க முடிவு

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 700 இடங்களை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியை தமிழக அரசு எதிர்பார்த்து உள்ளது.
இதில் 270 இடங்களுக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.

புதிதாக திருவாரூர், விழுப்புரத்தில் மருத்துவ கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்பட உள்ளது. இந்த இரு கல்லூரிகளில் தலா 100 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரியிலும், மதுரை மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் எண்ணிக்கையை 165ல் இருந்து 265 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.

செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் எண்ணிக்கை 50ல் இருந்து 150 ஆகவும், மற்ற மருத்துவ கல்லூரிகளில் 100 முதல் 150 வரை மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கை, நோயாளிகள், மருத்துவர்கள் விகிதங்கள் அடிப்படையில் கூடுதல் இடங்களுக்கு அரசு அனுமதி கோரியுள்ளது.

இதே போல் சுயநிதி கல்லூரிகளிலும் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்து அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதியை எதிர்நோக்கி உள்ளன.

Source & Thanks ; thatstamil

Leave a Reply

Your email address will not be published.