பசிபிக் கடலில் 5.4 சதுர மைல் அளவுக்கு உருவாகியுள்ள குப்பை தீவு

லாஸ் ஏஞ்சல்ஸ்:அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தருகே உள்ள பசிபிக் கடலில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் சேர்ந்து தீவு உருவாகியுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கலிபோர்னியாவுக்கும் ஹவாய் தீவுக்கும் இடையே உள்ள பசிபிக் கடலில் நீரின் சுழற்சி வேகம் அதிகம் உள்ளது. இதனால் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள பொருட்கள் கூட இந்த பகுதிக்கு இழுத்து வரப்படுகின்றன.

கடந்த 60 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த இடத்தில் குப்பைகள் சேர துவங்கின. கடந்த 20 ஆண்டுகளில் குப்பைகளின் அளவு பல மடங்கு சேர்ந்து விட்டன. பிரிட்டன் தீவை போல ஆறு மடங்கு அதிகமாக இங்கு குப்பைகள் சேர்ந்து விட்டன. பிளாஸ்டி பொருட்கள், விளையாட்டு பொருட்கள், பொம்மைகள், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான டப்பாக்கள் என ஒரு தீவு அளவுக்கு குப்பைகள் சேர்ந்து விட்டன.இந்த பகுதியில் வளரும் மீன்களின் வயிற்றில் குப்பைகளின் துகள்கள் உள்ளன. சமீபத்திய ஆய்வில் ஒரு மீனின் வயிற்றிலிருந்து 26 பிளாஸ்டிக் துண்டுகள் எடுக்கப்பட்டன.

இந்த தீவு கூட்டம் கடல் வாழ் உயிரினங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் கெடுதலை விளைவிக்கும், என சுற்றுசூழல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடும் மீன்களை மனிதர்களும் சாப்பிட்டால் அதனால், உடல்நிலை பாதிப்பு உண்டாகும். எனவே, இந்த குப்பை தீவை என்னசெய்யலாம், என தீவிர ஆலோசனை நடக்கிறது.சான்பிரான்சிஸ்கோ மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த சுற்றுச் சூழல் வல்லுனர்கள் பசிபிக் கடலில் சேர்ந்துள்ள குப்பைகளை கப்பல்களில் எடுத்து வந்து எரிசக்தி பொருளாக மாற்றலாம், என கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ரிச்சர்டு பெயின் குறிப்பிடுகையில், “சுற்றுச் சூழலால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இந்த தீவை உதாரணமாக காட்டலாம்’ என்கிறார்.பிரிட்டனின் பரப்பு 94 ஆயிரத்து 525 சதுர மைல்கள். ஆனால், பசிபிக் கடலில் சேர்ந்துள்ள குப்பைகளின் அளவு ஐந்து லட்சத்து 40 ஆயிரம் சதுர மைல்கள். இந்தப் பகுதியில் கடல் தண்ணீரும் ரசாயனமாக மாறியுள்ளது.

Source & Thanks ; dinamalar

Leave a Reply

Your email address will not be published.