வேலை தருவதில் சென்னை முதலிடம் : ஆய்வில் தகவல்

புதுடில்லி : பொருளாதார மந்தத்துக்குப் பின் ஏற்பட்டு வரும் எழுச்சிமிக்க சூழலில், வேலைவாய்ப்புகளைத் தருவதில் இந்தியாவில் சென்னைதான் முதலிடம் வகிக் கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


உலகளாவிய பொருளாதார மந்தத்தில் உருவான பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வரும் வேளையில், இந்தியா, பிரேசில், தைவான், கோஸ்டா ரிக்கா, பெரு, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. “மேன்பவர் எம்ப்ளாய் மென்ட்’ நிறுவனம் நடத்திய ஆய்வில், இன்னும் மூன்று மாதங்களுக்கு இந்தியாவில் எல்லா துறைகளிலும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, நிதி, இன்சூரன்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் வேலைகள் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில், சென்னை, மும்பை, கோல்கட்டா, ஐதராபாத், பெங்களூரு, டில்லி ஆகிய நகரங்களில் வேலைவாய்ப்புக் கான சூழல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சென்னையில்தான் அதிகளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. சென்னையில், மாபாய் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. சென்னை வாகன உதிரிபொருட்கள் தயாரிப்பதில் முன்னணியில் இருப்பதால், அந்தத் துறையின் எதிர்காலம் பிரகாசமாகவே இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தெலுங்கானா பிரச்னையின் விளைவாக, ஐதராபாத்தில் குவிய வேண்டிய வாய்ப்புகள் கூட இப்போது சென்னையை நோக்கி வருகின்றன. குறிப்பாக அமேசான், எச்.சி. எல்., டி.சி.எஸ்., ஐ.பி.எம்., போன்ற நிறுவனங்கள் சென் னையை அடிப்படையாகக் கொண்டு இயங்காவிட்டாலும் தங்கள் பணிகளுக்கான ஆட் களை சென்னையில்தான் தேர்ந் தெடுக்கின்றன. குறிப்பாக, ஐ.டி., துறையில் முன்னணியில் இருக்கும் காக்னிசன்ட் நிறுவனம், கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரை சென்னையில் மட்டும் 10 ஆயிரத்து 300 பேரைத் தேர்வு செய்துள்ளது.

சென்னையில் கல்வி தரமாக இருப்பதாலும், தனியார் துறையில் சென்னை மாணவர்கள் ஆர்வம் செலுத்தி வருவதாலும் வேலைவாய்ப்புகள் குவிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில், பொழுதுபோக்கு மற்றும் தொழில் சேவைகள் துறைகள் மந்த நிலையில் இருந்து இன்னும் மீளவில்லை. டில்லியில் நிதிச் சேவைகள் மற்றும் கட்டுமானத் துறையில் குறிப்பிடத்தக்க சரிவு இன்னும் நீடிக்கிறது. ஐதராபாத்தில் ஐ.டி., உட் கட்டமைப்பு, கட்டுமானம் மற் றும் தயாரிப்பு துறைகள் பலத்த அடிவாங்கியுள்ளன. பெங்களுருவில், ஐ.டி., சுமாரான முன்னேற் றத்தில்தான் இருக்கிறது. கோல் கட்டாவில் தயாரிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் சிறிதளவு முன்னேற்றம் காணப்படுகிறது. சென்னை மட்டுமே வேலைவாய்ப்புகளை அள்ளித் தருவதில் இந்தியாவில் இப்போது முதலிடத்தில் இருக்கிறது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.