நாமக்கல் சிபிஎம் செயலாளர் படுகொலை- சிபிசிஐடி விசாரணைக்கு கருணாநிதி உத்தரவு

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் படுகொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி முதல்வர் கருணாநிதி [^] உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டிஜிபி லத்திகா சரண் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர். இவர் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது பள்ளிப்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும் சிலர் முன்விரோதம் காரணமாக ராஜவீதியில் வழிமறித்து தாக்கி கொலை செய்தனர். இந்த சம்பவம் கடந்த 10-ந் தேதி பள்ளிப்பாளையம் காவல் நிலைய எல்லையில் நடந்தது.

இது சம்பந்தமாக வேலுச்சாமியின் சகோதரர் சண்முகசுந்தரம் புகார் [^] செய்தார். அந்த புகாரையொட்டி பள்ளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் 147, 148, 302 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தற்போது முதல்வர் கருணாநிதியின் உத்தரவுப்படி தற்போது அந்த வழக்கு மாநில குற்றப்பிரிவு குற்ற புலனாய்வு துறைக்கு (சி.பி.சி.ஐ.டி.) மாற்றம் செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலுச்சாமி கொலை வழக்கை உள்ளூர் போலீஸார் விசாரிக்கக் கூடாது, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்து முதல்வருக்குக் கடிதம் எழுதியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.