இளையோர் முதல் அநுபவம் மிக்கவருக்கு வாய்ப்பு ! பா.ஜ., வின் அகில இந்திய பொறுப்பாளர்கள் நியமனம்

புதுடில்லி: புகழ்பெற்றவர்கள் மற்றும் இளம் துடிப்பு மிக்கவர்கள் என அலசி பா.ஜ.க.,வின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வசுந்த்ரா ராஜே, ஹேமாமாலினி, வருண்காந்தி, அர்ஜூன் முண்டா அருண்குமார் , முக்கியஸ்தவர்கள் ஆவர்.

இந்த புதிய நிர்வாகிகள் மூலம் கட்சி மேலும் பலம் பெறும் என பா.ஜ., நம்பிக்கை தெரிவித்துள்ளது. பாஜ., தலைவர் நிதின் கட்காரி வெளியிட்டுள்ள புதிய நிர்வாகிகள் பட்டியல் விவரம் வருமாறு: கட்சியின் பொதுசெயலர்களாக வசுந்த்ரா ராஜே ( ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ) , அனந்த்குமார், விஜய்கோயல் . அர்ஜூன் முண்டா ( ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ) , ரவிஷங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான், ஆகியோர் பொது செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு வாய்ப்பு : பியூஸ் கோயல் பொருளாளராகவும், ஹேமாமாலினி , நஜ்மா ஹெப்துல்லா, பி.எஸ்.கோஷியாரி, கல்ராஜ் மிஸ்ரா, முக்தர் அப்பாஸ் நக்வி, சாந்தாகுமார் ஆகியோர் துணை தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருண்காந்தி , ஸ்மிருதி ராணி , நவஜோத் சிங், ( முன்னாள் கிரிக்கெட் வீரர் ) ஆர்.பி., மெக்ரா, சந்தோஷ் கங்குவார் ஆகியோர் செயலர்களாக நியமிக்கப்படுகின்றனர். தரூண்விஜய் ஷகானாவாய் ஷூவோகா, ஆகியோர் பா.ஜ., செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த எச். ராஜா., லலிதா குமாரமங்கலம் ஆகிய இருவரும் நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பொறுப்பு நியமனம் குறித்து நிருபர்களிடம் பேசிய ரவிஷங்கர் பிரசாத் இளம் தலைமுறையினர் மற்றும் முதியவர்கள், அநுபவமிக்கவர்கள் என தேர்வு செய்யப்பட்டு பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர்கள் மற்றும் கவர்னகள் பதவியில் இருந்தவர்கள் என பலருக்கு முக்கிய பொறுப்புகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இது பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றார்.

ராஜீவ் உறவினரான வருண்காந்திக்கு செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ராகுலுக்கு எதிராக ஈடு கொடுக்க பா.ஜ., வுக்கு பயன்படுவார் என பா.ஜ.,வில் நம்பிக்கை நிலவுகிறது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.