சமச்சீர் கல்வி:ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கக் கோரிக்கை

posted in: தமிழ்நாடு | 0

உடுமலை,மார்ச்.15: சமச்சீர் கல்வி தொடர்பான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்க வேண் டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அறிவியல் இயக்க மடத்துக்குளம் வட்டார அமைப்புக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீரங்கன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் வி.சந்திரசேகரன், க.லெனின்பாரதி, எஸ்.ரங்கராஜ் ஆகி யோர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
மரபணு மாற்றுப் பயிர்களை மத்திய அரசு அனுமதிக்க கூடாது.
சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்களை உடனடியாக அச்சிட்டு ஆசிரியர்களுக்கு பாடப் பொருள் தொடர்பான பயிற்சிகளை அளிக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிட வேண்டும். அனைத்து மத ட்ரஸ்ட்டுகளின் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்டவைகளை அரசு கையகப்படுத்தி ஏழை, எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய வட்டார தலைவராக வி.ஆனந்தகுமார், செயலாளராக எம்.நாகராஜ், பொருளாளராக எஸ்.அரவிந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.