மலேசிய ஏர்லைன்ஸýடன் டிசிஎஸ் ஒப்பந்தம்

புது தில்லி, மார்ச் 15: உள்கட்டமைப்பு தொடர்பான சேவை அளிப்பதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 5 ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
மலேசியா ஏர்லைன்ஸின் தகவல் மையம், கம்ப்யூட்டர் நெட்வொர்க், பாதுகாப்பு போன்ற சேவைகளை டிசிஎஸ் ஏற்கெனவே அளித்து வருகிறது.


இது குறித்து ஏர்லைன்ஸின் தொழில்நுட்பத் துறை அதிகாரி அப்துல் ரஹ்மான் கூறியது: வெளிப்பணி ஒப்படைப்பைப் பெறுவதில் நிறுவனம் வகுத்த புதிய உத்தியின் வெளிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த செலவில் மேம்பட்ட சேவை நிறுவனத்துக்குக் கிடைக்கும்.
டிசிஎஸ் ஏற்கெனவே பல்வேறு சேவைகளை எங்கள் நிறுவனத்துக்கு அளித்து வருகிறது. இப்போது புதிதாக உள்கட்டமைப்பு சேவையை மேம்படுத்தும் பணியும் அந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.