அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான அதிகரிக்கும் பாலியல் பலாத்காரம்

உலகில் பாலியல் பலாத்காரங்கள் மிகவும் அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கதான் முதல் இடத்தை தொடர்ந்து கைப்பற்றி வருகின்றது என்பது அதிகமானவர்களுக்கு தெரியும்.


தற்போது வெளி வரும் அறிக்கைகள் இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான பாலியல் பலாத்காரத்திலும் அமெரிக்காவை எவரும் முந்தி விட முடியாது என்று கூறுகின்றது. அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்க ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

கடந்த வருடத்தில் 2009 மட்டும் 37000 பெண் இராணுவ சிப்பாய்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகியதாக அந்த அறிக்கை கூறுகின்றது எனிலும் இந்த தொகை மிகவும் சிறியது என்றும் பாலியல் பலாத்காரம் செய்யபட்ட அதிகமான பெண் இராணுவ சிப்பாய்கள் அது பற்றி முறைப்பாடு செய்வது இல்லை முறைப்பாடு செய்தால் பழிவாங்கபடுவதாக கூறுகின்றனர்.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மொத்த இராணுவ பாலியல் பலாத்காரதில் 25 வீதம் அங்குதான் நடை பெறுவதாக பெண்டகன் அறிக்கை ஒன்று கூறுகின்றது.

அமெரிக்கா முழுவதும் பாலியல் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை விடவும் கூடுதல் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.பாலியல் தொடர்பான குற்றங்கள் அங்கு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

இதற்காக அமெரிக்காவில் பாலியல் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களின் முகவரி உள்ளிட்டவை அடங்கிய சேவையை தனியார் நிறுவனம் ஒன்று வழங்குகிறது. இதன்மூலம், ஒருவர் தாம் வாழும் பகுதிக்கு அருகில் பாலியல் குற்றங்களை புரிவோர் என்று கருதப்படுவோர் யாரேனும் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்று அந்நிறுவனம் விளம்பரப்படுத்திவருகின்றது என்பது குறிபிடதக்கது.

Source & Thanks : z9world

Leave a Reply

Your email address will not be published.