மருந்துகளை அதிகமாக சாப்பிட்டால் பாதிப்பு: மருந்தியல் கருத்தரங்கில் டாக்டர்கள் விளக்கம்

இந்திய மருந்தியல் சங்கத்தின் 3 நாள் சர்வதேச மாநாடு கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இன்று மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது. போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் நேற்று மருத்துவதுறையில் இந்தியாவில் புதிய முன்னேற்றம் என்ற கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்கை இந்தியாவின் அணு ஆராய்ச்சி தலைவர் டாக்டர் சிவதாணு பிள்ளை தொடங்கி வைத்தார். அவர் தனது தொடக்க உரையில் மருந்துகள் மனித உடற்கூறுக்கு ஏற்பவேலை செய்வதின் அவசியத்தை கூறி தேவை இல்லாமல் அதிகமாக மருந்து பொருட்களை நோயாளிகள் சாப்பிடுவதால் அதன் பக்க விளைவுகள் மனித உடற்கூறுகளை பாதிக்கின்ற விவரங்களை எடுத்துக் கூறினார்.

கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் முகம்மது யூசுப் பேசுகையில், இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட மருந்து பொருட்கள் அமெரிக்க யு.எஸ்.எப்.டி.ஏ. மருத்துவ கழகத்தில் பதிவு செய்யப்பட்ட புதிய மருத்துகளின் விவரங்களையும், இந்திய வருகிற கால கட்டத்தில் ஏற்றுமதி செய்யக்கூடிய மருந்துகளின் வாய்ப்பை பற்றியும், உலக அளவில் 3 மனிதர்கள் எடுக்கின்ற மருந்து பொருட்களில் ஓன்று இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது என்ற விவரங்களையும் எடுத்துக்கூறினார்.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஐ.டி.துறையில் மட்டுமல்ல, மருத்துவ துறையிலும் சவால் விடுகின்ற அளவில் இந்திய மருத்துவதுறை முன்னேற்றம் கண்டுள்ளது என்று எடுத்துரைக்கப்பட்டது.

கருத்தரங்கில் அமெரிக்காவை சேர்ந்த ஹென்றி மேனஸ், கொரியாவை சேர்ந்த சுஜாநாம், பி.டி.சேத், பி.சுரேஷ் மற்றும் 3ஆயிரத் துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், விஞ்ஞானி கள், மருத்துவ வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.