ராஜஸ்தானில் ஆற்றில் பஸ் கவிழ்ந்தது ; 26 மாணவர்கள் பலி; 38 பேர் உயிர் பிழைத்தனர்

ஜெய்ப்பூர்: சுற்றுலா சென்ற மாணவர்கள் பஸ் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் சிக்கி 26 மாணவர்கள் உயிரிழந்தனர். 38 பேர் காயத்துடன உயிர் தப்பினர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மதர் இந்தியா ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனி பஸ் மூலம் சுற்றுலா சென்றனர்.

ஆக்ராவுக்கு சென்று பின்னர் மதுராவில் இருந்து திரும்பியபோது சவாய்மதோபுர் பகுதியில் உள்ள ஆற்றில் பஸ் கவிழ்ந்தது. இதில் ஆற்றில் மூழ்கி 26 பேர் இறந்து போய் விட்டனர். இதில் 11 பேர் மாணவிகள் ஆவர். காயத்துடன் உயிர் பிழைத்த 38 பேர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் இந்த சம்பவம் பெரும் சேகாத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் விழுந்த பஸ்சை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளுக்கு சென்று குறிப்பாக முக்கிய கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்தபடி இருந்தோம். சுற்றுலாவை மிக மகிழ்ச்சியாக முடித்து திரும்பி கொண்டிருந்தபோது இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. எங்களது சக நண்பர்களை இப்படி இழப்போம் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை என உயிர் பிழைத்தவர்களில் ஒரு மாணவர் கூறினார்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக புள்ளிவிவர குறிப்பு தெரிவிக்கிறது. இது போன்ற விபத்துக்களை தவிர்க்க விழிப்புணர்வு பிரசாரம் அதிகரிக்க வேண்டும்.

மத்திய பிரதேசத்தில் அம்மை தடுப்பூசி போட்ட 4 குழந்தைகள் பலி: மத்தியபிரேதச மாநிலத்தில் அம்மை தடுப்பூசி போட்டுக்கொண்ட 4 சிறு குழந்தைகள் டாமோ மாவட்டத்தில் பலியாயினர். இது தொடர்பாக நர்சு கைது செய்யப்பட்டார். மாவட்ட தடுப்பூசி அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தடுப்பூசி போட்ட 12 மணி நேரத்தில் இந்த குழந்தைகளின் உதடு மற்றும் மூக்கு நீல நிறத்தில் மாறியதாகவும் தொடர்ந்து மரணத்தை சந்தித்தாகவும் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அம்மாநில சுகாதார துறை இயக்குனர் நேரில் சென்று விசாரைண நடத்துகிறார், குளிரூட்டும் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து காலம் தாழ்த்தி இந்த மருந்து வழங்கப்பட்டதால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.