எண்ணெய் கிடங்குகளை தகர்க்க திட்டம்: மும்பையில் 2 பயங்கரவாதிகள் கைது

மும்​பை​யில் மீண்​டும் தாக்​கு​தல் நடத்த திட்​ட​மிட்டிருந்த 2 பயங்கரவாதிகளை மகாராஷ்டிர ​ சிறப்பு போலீஸôர் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து உத்தரவு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லத்தீப் என்ற குட்டு ​(29),​ ரியாஸ் அலி ​(23) ஆகிய இருவரும் மும்பையில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

அவர்கள் இருவரும் மட்டுங்கா ரயில் நிலையத்தில் போலீஸôரால் மடக்கி பிடிக்கப்பட்டனர்.

மும்பையில் எந்தெந்த இடங்களில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் என்பதையும் போலீஸôர் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி பாந்த்ராவில் ஓ.என்.ஜி.சி.​ ​(எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்)அலுவலகம் மற்றும் எண்ணெய் கிடங்குகள்,​​ போரிவழியில் உள்ள தக்கர் மால்,​​ தெற்கு மும்பையில் உள்ள மங்கல்தாஸ் மார்க்கெட் ஆகிய இடங்களில் குண்டு வெடிப்பு நடத்தவும் தீ வைக்கவும் இவர்கள் திட்டமிட்டிருந்ததுவிசாரணையில் தெரியவந்தது.

இவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள ஒருவரிடமிருந்து அவ்வப்போது உத்தரவுகள் வந்துள்ளதும் விசாரணையில் வெளியாகி உள்ளது.​ அவரை “அங்கிள்’ ​(மாமா)​ என்றே இவர்கள் அழைக்கின்றனர்.

யார் அந்த அங்கிள்?​ பாகிஸ்தானில் இருந்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அந்த அங்கிள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.​ அவரை அடையாளம் காண மத்திய உளவுப் பிரிவின் உதவியும் கோரப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை தலைவர் ரகுவம்சி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரில் அப்துல் லத்தீப்,​​ மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார்.​ ரியாஸ் அலி தகிசார் பகுதியைச் சேர்ந்தவர்.

பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெறுவதற்காக மும்பையிலிருந்து அனுப்பப்படும் இளைஞர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து கொடுக்கும் பணியை இவர்கள் செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆவணங்களையும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் அவர்கள் சமர்ப்பித்துள்ளதும் தெரிய வந்தது.

இங்கிருந்து பயிற்சிக்காக இளைஞர்களை அனுப்பும் முன்பு,​​ மும்பையில் பெரிய தாக்குதல் நடத்தி அந்தச் செய்தியை பாகிஸ்தானில் உள்ள தங்களது வழிகாட்டிக்கு வெற்றிச் செய்தியாக அளிக்க வேண்டும் என்பதே இந்த பயங்கரவாதிகள் குறிக்கோள் என்று போலீஸôர் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் அதிகம் படிக்கவில்லை என்றாலும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த தெரிந்து வைத்துள்ளனர்.​ தாக்குதல் நடத்த வேண்டிய இலக்குகளை சரியாக தேர்ந்தெடுத்து அதை விரைந்து செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் போலீஸ் வலையில் சிக்கிவிட்டனர்.

இவர்களைப் பற்றி ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீஸ் விரைந்து செயல்பட்டு இருவரையும் கைது செய்தது.

இந்த சதியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் போலீஸôர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கடல் வழியாக பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.​ இதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உளவுத் துறையும் போலீஸôரும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் ஒருவர் கைது:​ மும்பையைப் போன்று குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள சமர்கா கிராமத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை குஜராத் போலீஸôர் கைது செய்தனர்.

மத்திய உளவுப்படை கொடுத்த தகவல்களை அடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.

பஷீர் அகமது பாபா ​(32) என்ற அந்த பயங்கரவாதியிடம்,​​ குஜராத்தில் உள்ள இளைஞர்களை பாகிஸ்தானில் பயிற்சிக்கு அனுப்பும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிந்தது.​ இதுவரை அவர் 3 ஆயிரம் இளைஞர்களை பயங்கரவாத பயிற்சி அனுப்பி உள்ளார்.​ ஸ்ரீநகரைச் சேர்ந்த அவர் காஷ்மீர் போலீஸôரால் “பெப்சி பாமர்’ என்று அழைக்கப்படுகிறார்.​ பெப்சி கேனில் வெடிபொருள்களை வைத்து வெடிக்க வைக்கும் திறன் கொண்டவர் இவர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் பிலாலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.​ வேறு சில பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சதி முறியடிப்பு:​ மத்திய உளவுப் படை அளித்த தகவல்களின் பேரில் ஒரே நேரத்தில் 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதால் பெரும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே.​ பிள்ளை தெரிவித்தார்.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.