சத்யம் மோசடி ராஜுக்கு உடல்நிலை மோசம் : கோர்ட்டில் ஆஜராவதில் சிக்கல்

பல கோடி ரூபாய் மோசடி செய்த சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவின் உடல் நிலை மோசமாக இருப்பதால், அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆந்திராவில் சத்யம் கம்ப் யூட்டர் நிறுவனத்தில் நடைபெற்ற பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு, கடந்தாண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.இவருடன் கைதான ஏழு குற்றவாளிகளும் சஞ்சலகுடா மத்திய சிறையில் அடைக் கப்பட்டனர். ஆனால், ராமலிங்க ராஜு “ஹெப்படைடிஸ்-சி’ நோயால் பாதிக்கப்பட்டதால், அவர் ஐதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் மையம் (நிம்ஸ்)ல் சேர்க்கப்பட் டார்.மேலும், ராமலிங்க ராஜுவை மருத்துவமனையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றினால், அது மிகவும் அபாயமானது என, சிறப்பு கோர்டில் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, “நிம்ஸ்’ மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் அஜித் குமார் சமர்ப்பித்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:ராமலிங்க ராஜுவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரை மருத்துவமனைக்கு வெளியில் அழைத்து சென்றால், அவருக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் ஆன்டி-வைரல் சிகிச்சையால், பக்க விளைவுகள் உருவாகி உள்ளன. எனவே, அவரை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த இயலாது.அவர் “ஹெப்படைடிஸ்-சி’க்கு அளித்து வரும் ஆன்டி-வைரல் சிகிச்சையால் உண்டாகும் பக்கவிளைவுகளில் இருந்து குணமாக, நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும். எனவே, அதுவரை அவரை மருத்துவமனைக்கு வெளியில் அழைத்து செல்வது சரியானது அல்ல.ராமலிங்க ராஜுவிற்கு அளிக் கப்பட்டு வரும் ஆன்டி-வைரல் சிகிச்சையை தொடர வேண்டும். இல்லை என்றால், அது கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோய் போன்றவை ஏற்பட வழிவகுத்துவிடும். அவருக்கு ஆன்டி-வைரல் ஊசியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது டோஸ் அளித்த போது, கடுமையாக வெள்ளை அணுக்கள் குறைபாடு (நியூட்ரோபீனியா) மற்றும் தட்டை அணுக்கள் குறைபாடு (த்ரோம்போ சைட்டோபீனியா) ஆகியவை ஏற்பட்டது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, இவ்வழக்கு விசாரணை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்த, பெருநகர கோர்ட் கூடுதல் தலைமை நீதிபதி சக்கரவர்த்தி கூறுகையில், “கடந்த காலங்களில் சுப்ரீம் கோர்ட் உட்பட பல்வேறு கோர்ட்களில் நடைபெற்ற இதே போன்ற வழக்குகளில், குற்றவாளி நீண்ட நாட்கள் உடல் நிலை சரியில்லாத போது எவ் வாறு வழக்கு நடைபெற்றது என்பதை சி.பி.ஐ.,யினர் ஆய்வு செய்ய வேண்டும்’ என்றார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.