விடைத்தாள் திருத்தும் பணி வரும் 20ம் தேதி ஆரம்பம்

posted in: தமிழ்நாடு | 0

சென்னை : பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, வரும் 20ம் தேதி முதல் நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த முதல் தேதியில் இருந்து பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன.

மொழிப்பாட தேர்வுகள் மற்றும் இயற்பியல், வேதியியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட சில தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியை ஆரம்பிப்பது குறித்து விவாதிக்க, தேர்வுத்துறையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விடைத்தாள் திருத்தும் மையங்களின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் மட்டும், கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் குறித்து, கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன.
இது குறித்து, துறை வட்டாரங்கள் கூறும்போது,”40க்கும் மேற்பட்ட மையங்களில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. வரும் 20ம் தேதியில் இருந்து, விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும். ஏப்ரல் 25 தேதிக்குள், இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனர். பிளஸ் 2 தேர்வுகள், வரும் 22ம் தேதியுடன் முடிகிறது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.