நோபல் பரிசுப் பணத்தை சமூக அமைப்புகளுக்கு வழங்க ஒபாமா முடிவு

இந்த ஆண்டுக்கான நோபல் அமைதி விருதைப் பெற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அதன் மூலம் கிடைத்த ரூ.14 லட்சம் அமெரிக்க டாலர்களை மொத்தம் 10 சமூக அமைப்புகளுக்கு பகிர்ந்தளிப்பதாக அறிவித்துள்ளார்.

ஹைட்டி நிலநடுக்க நிவாரண உதவிக்காக நிதி திரட்டி வரும் கிளிண்டன்-புஷ் அறக்கட்டளைக்கு 2.5 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக ஒபாமா அறிவித்துள்ளார். இதேபோல் மத்திய ஆசிய இன்ஸ்டிடியூட் அறக்கட்டளைக்கு ஒரு லட்சம் டாலர்களை வழங்குகிறார். இந்த அமைப்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கிராமப் பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வியறிவு வழங்கி வருகிறது.

இதேபோல் ஃபிஷர் ஹவுஸ் எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு 2.5 லட்சம் டாலர்களை நிதியுதவியாக ஒபாமா அளிக்கிறார்.

Source & Thanks : .lankasri

Leave a Reply

Your email address will not be published.