ஐ.நா. நல்லெண்ணத் தூதராக சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் ஐக்கிய நாடுகள் பேரவையின் சுற்றுச்சூழல் திட்ட நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.சச்சின் டெண்டுல்கரின் உலகம் முழுதுமான புகழால் அவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் ஏற்படுத்த முடியும் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு வெள்ளியன்று அறிவித்துள்ளது.

“இந்த புவியின் பல இடங்களில் விளையாடி மகிழ்ந்திருக்கிறேன், தற்போது நமது வீடான இந்தப் புவியின் நன்மைக்காக ஏதாவது செய்ய நேரம் வந்துள்ளது.” என்று சச்சின் டெண்டுல்கர் இந்த கௌரவம் குறித்து பெருமிதமடைந்துள்ளார்.

“புவியைக் காப்பாற்றும் பெருமுயற்சி என்ற சவாலில் ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்ற தயாராயிருக்கிறேன், நான் நல்லக்குழுவுடன் இணைந்துள்ளேன், அனைவரும் இணைந்து இதனைத் திறம்படச் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.” என்று சச்சின் டெண்டுல்கர் மேலும் கூறுகையில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் செயல் இயக்குனர் அகிம் ஸ்டெய்னர், “சச்சினின் குணம், நேர்மை, அவரது அறிவு மற்றும் அர்ப்பணிப்பு, பரவலான சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்கு தூண்டுகோலாக அமையும்.” என்றார்.

ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் “நல்லெண்ணத் தூதராக” சச்சின் தன் முதல் கடமையை இன்று ஐ.பி.எல். தொடக்கத்தில் நிகழ்த்துகிறார்.

அதாவது புவியைக் காப்பாற்றும் பசுமை உறுதிமொழியை சச்சின் டெண்டுல்கர் தலமையேற்று நடத்துகிறார்.

ஏற்கனவே யூனிசெப் அமைப்பின் குழந்தைகள் நிதியத்திற்காக சச்சின் டெண்டுல்கர் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். தொடக்க விழாவில் இன்று சச்சின் டெண்டுல்கரின் இந்த புதிய பொறுப்பை அறிமுகம் செய்யும் விதமாக மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலான பெரிய அளவு பூமி உருண்டை ஒன்றை உருவாக்கி அதில் ஐ.பி.எல். அணித் தலைவர்கள் கையெழுத்திடுகின்றனர்.

Source & Thanks : lankasri

Leave a Reply

Your email address will not be published.