மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு “உலக அரசியல் மேதை” விருது அமெரிக்க நிறுவனம் வழங்குகிறது

அமெரிக்காவில் “அப்பீல் ஆப் கான்சியஸ் பவுண்டேசன் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. மத சுதந்திரம் மற்றும் மனித உரிமை ஆகியவற்றில் சேவையாற்றி வருகிறது. இந்த நிறுவனம் ஆண்டு தோறும் உலகில் மிகச்சிறந்த அரசியல் தலைவர்களை தேர்வு செய்து “உலக அரசியல் மேதை” என்ற விருதை வழங்கி வருகிறது.

2010-ம் ஆண்டுக்குரிய “உலக அரசியல் மேதை” விருதை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை அமெரிக்க முன்னாள் மந்திரியும், அமைப்பின் நிர்வாகியுமான ஜான் நெக்ரோ போன்தே அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் மீரா சங்கரிடம் கூறினார்.

கடந்த ஆண்டு “உலக அரசியல் மேதை” விருது இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனுக்கு வழங்கப்பட்டது. 2008-ம் ஆண்டு பிரான்சு அதிபர் நிகோலஸ் சார்கோ சிக்கும் 2007-ம் ஆண்டு ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்ரெட்டுக்கும் 2006-ம் ஆண்டு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியாவுக்கும் வழங்கப்பட்டன.

அப்பீல் ஆப்கான்சியஸ் பவுண்டேசன் 1965-ம் ஆண்டு ராப்பி ஆர்தர் ஷானிபர் என்பவரால் தொடங்கப்பட்டது.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.