இஸ்ரேல் – இலங்கை க்கு இடையே பொருளாதார ஒப்பந்தம்

சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ அவர்களுக்கம் புதுடில்லி மற்றும் கொழும்புக்கான இஸ்ரேலியத் தூதுவர் மார்க் சோபர் அவர்களுக்கம் இடையே கடந்த செவ்வாய்கிழமை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருநாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடுவதற்கு இணக்கப்பாடு எய்தப்பட்டுள்ளதாகவும் விவசாயம், தொழில் வாய்ப்பு, சுற்றுலாத்துறை போன்ற விடயங்களிலேயே இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.

இதேவேளை மார்க் சோபர் அவர்கள் சிறீலங்கா பயங்கராவாதத்திற்கு எதிரான போரில் வெற்றி ஈட்டியமைக்காக அவர் மகிழ்ச்சி அடைவதாகவும் இருநாடுகளும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : pathivu.

Leave a Reply

Your email address will not be published.