பயங்கரவாதிக்கு பணம் கொடுத்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ

புதுதில்லி, மார்ச் 11: இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 2 பேருக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பணம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் தில்லி பாட்லா ஹவுஸ் என்கவுன்டரில் தப்பிச் சென்றவர்கள்.

மேலும் தில்லி தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

÷இந்த இருவரில் ஷாஸôத் அளித்த வாக்குமூலத்திலிருந்து ஆஸம்கர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல் சலாம் பணம் கொடுத்தது தெரியவந்தது.

இதை முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் சலாமே ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால் அவர்கள் இருவரும் தில்லி குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்றோ அல்லது போலீஸ் என்கவுன்டரில் தப்பி வந்தவர்கள் என்றோ எனக்குத் தெரியாது என்று அப்துல் சலாம் கூறியுள்ளார்.

Source & Thanks : .dinamani

Leave a Reply

Your email address will not be published.