அடுத்த வாரம் விற்பனைக்கு வரும் ‘3 டி’ டிவி

posted in: வர்த்தகம் | 0

நியூயார்க்: தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பில் புதிய புரட்சியாக 3டி டிவிக்கள் அடுத்த வாரம் விற்பனைக்கு வருகின்றன.

சாம்சங் மற்றும் பானாசோனிக் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த 3 டி டிவிக்கள் மூலம், இனி முப்பரிமாண படங்களை நம் வீட்டு வரவேற்பறைகளிலேயே கண்டுகளிக்க முடியும்.

3 டி கண்ணாடிகள், ப்ளூ ரே பிளேயர் உள்பட இந்த 3 டி டிவி (46 இன்ச்) ஒன்றின் விலை 3000 டாலர்கள் என நிர்ணயித்துள்ளது சாம்சங் நிறுவனம். அதாவது ரூ.1.37 லட்சம்!

பானாசோனிக் நிறுவனம் தனது முதல் 3 டி டிவியை வரும் புதன்கிழமை விற்பனைக்கு விடுகிறது.

இந்த டிவிக்களுடன் தரப்படும் 3 டி கண்ணாடிகள் தியேட்டர்களில் தரப்படுவதைப் போல பயன்படுத்தியதும் தூக்கியெறியும் ரகமல்ல. இவை அளவில் பெரியதாகவும், ரீசார்ஜ் செய்யக் கூடிய எலெக்ட்ரிக் கண்ணாடிகளாகவும் இருக்குமாம்.

ஹாலிவுட்டில் ஷ்ரெக், அவதார், அலைஸ் இன் வொன்டர்லேண்ட் என பெரும்பாலும் 3 டி படங்கள் வரத் தொடங்கிவிட்டதால் அவற்றுக்கு தொலைக்காட்சி உலகிலும் பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்த வேண்டிய அவசியம் காரணமாக இந்த 3டி டிவிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எப்படியும் இந்த ஆண்டு 40 லட்சம் 3 டி டிவிக்கள் விற்றுவிடும் என்கிறார் அவர்.

இந்த போட்டியில் சோனியும் விரைவில் குதிக்கிறது. வரும் ஜூன் மாதம் சோனியின் 3 டி டிவி விற்பனைக்கு வருகிறது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.