ஜெ. சொத்துக் குவிப்பு-ரத்து செய்ய கர்நாடக ஹைகோர்ட் மறுப்பு

posted in: தமிழ்நாடு | 0

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெயலலிதா [^] தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, தினகரன், இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

முன்னதாக கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில், ஜெயலலிதாவுக்கு எதிராக நடந்து வந்த லண்டன் ஹோட்டல் வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது.

இதையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கே.என்.கேசவநாராயணா முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதிகள், சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய இயலாது எனக் கூறி, ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.