திரைப்பட உதவி இயக்குநர்களுக்கு சங்கம் மூலம் சம்பளம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

posted in: தமிழ்நாடு | 0

சென்னை, மார்ச் 10: திரைப்பட உதவி இயக்குநர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சங்கம் மூலம் சம்பளம் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை சென்னையில் தொடங்கி வைத்தார்.

உதவி இயக்குநர்களுக்கு குறிப்பிட்ட அளவு சம்பளத்தை படத் தயாரிப்பாளர்கள் வழங்க வேண்டும் என இயக்குநர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

அதன்படி, இயக்குநர் சங்கம் மூலம் திரைப்பட உதவி இயக்குநர்களுக்கு சம்பளம் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, “பெண்சிங்கம்’ மற்றும் “சீடன்’ உள்ளிட்ட படங்களில் பணிபுரியும் உதவி இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் வழங்கினர். அதை முதல்வர் கருணாநிதி, உதவி இயக்குநர்களிடம் அளித்தார்.

இந்தப் புதிய முறையில், திரைப்படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவார்கள்.

பெரிய பட்ஜெட் படங்களின் போது சம்பளத்தை உயர்த்தி கொடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் அவ்வப்போது முடிவு எடுக்கலாம்.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.