தமிழர்கள் அகதிகளாக வருவதை ஊக்குவிக்கக் கூடாது: உள்துறை இணை அமைச்சர்

இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக வருதை ஊக்குவிக்கக்கூடாது என்பதுதான் இந்திய அரசின் அணுகுமுறை என்று உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்துறை இணை அமைச்சர் அஜய் மக்கான் இலங்கை தமிழர் குறித்து மாநிலங்களவையில் எழுந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

’’இலங்கைத் தமிழ் அகதிகளை த‌மிழக‌த்‌தி‌ல் நிரந்தரமாகக் குடியமர்த்தும் திட்டம் எதுவும் ம‌த்‌திய அர‌சி‌ன் பரிசீலனையில் இல்லை.

இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக வருவதை ஊக்குவிக்கக் கூடாது என்பதுதான் மத்திய அரசின் அணுகுமுறையாகும். எனினும், அவ்வாறு இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வரும் போது அவர்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் தங்கள் நாட்டில் குடியேற இலங்கை அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கை அகதிகள் தாயகம் திரும்பும் வரையில் அவர்கள் மாநில அரசு அமைத்துள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் அடிப்படை நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இலங்கைத் தமிழ் அகதிகளை தமிழகத்தில் நிரந்தரமாக குடியமர்த்துவதற்கு யோசனை தெரிவித்து தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இந்த யோசனை மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை’’ எ‌ன்று அமை‌ச்ச‌ர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.