மகளிர் இடஒதுக்கீடு மசோதா விஜயகாந்த் வரவேற்பு

posted in: தமிழ்நாடு | 0

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

இம்மாதம் 8-ந்தேதி உலக மகளிர் தினத்தையொட்டி விடுத்த வாழ்த்து செய்தியில் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா இந்த கூட்டத்திலாவது நிறைவேற வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அதைபோல இந்த மசோதா டெல்லி மேல்- சபையில் பெருவாரியான வாக்குகளை பெற்று நிறைவேறியுள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஆனால் இது தற்காலிகமாக அரைகிணறு தாண்டியதாக ஆகிவிடக்கூடாது. லோக் சபாவிலும் இந்த மசோதா உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோருகிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.