இறந்தவர்களின் ஆவிகளை ஏலம் விட்ட நூதனப் பெண்

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் இறந்தவர்களின் ஆவிகளை ஏலம் விட்டு நூதனமாக நடந்து கொண்டுள்ளார் ஒரு பெண் [^].

ஆன்லைன் மூலம் இந்த ஏலம் நடந்தது. இறந்த இருவரின் ஆவிகள் அடங்கிய கண்ணாடி பாட்டில்களை அந்தப் பெண் நேற்று இரவு ஏலத்திற்கு விட்டார். இந்த இரு பாட்டில்களுக்குள் இருந்த ஆவிகளை ஒருவர் 1983 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுத்துள்ளார்.

ஏவி உட்பரி என்ற அமைப்பு இந்த நூதன ஏலத்தை நடத்தியது. கிறிஸ்ட்சர்ச் நகரைச் சேர்ந்தது இந்த அமைப்பு.

இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், இந்த ஆவிகளை எனது வீட்டில் வைத்து பிடித்தேன். பின்னர் அவற்றை அடக்கி கண்ணாடிப் பாட்டில்களுக்குள் புக வைத்தேன்.

இதில் ஒரு ஆவி, 1920களில் எனது வீட்டில் வசித்து வந்த முதியவர் ஆகும். இன்னொரு ஆவி, சிறுமியாகும் என்று கூறியுள்ளார் அந்த வினோதப் பெண்.

ஆவிகளை ஏலம் விடுவதாக ஏவி உட்பரி நிறுவனம் தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டவுடன் ஏகப்பட்ட பேர் ஏலத் தொகையுடன் குவிந்து விட்டனராம். கிட்டத்தட்ட 2 லட்சத்து 14 ஆயிரம் பேஜ் வியூக்களும் அதற்குக் கிடைத்துள்ளன.

இரண்டு ஆவிகளையும் ஏலத்திற்கு எடுத்த நபர் யார் என்பதை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் மாதிரி நியூசிலாந்தில் யாரும் பிறக்கவில்லை போலும்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.