மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றத்துக்கு கருணாநிதி மகிழ்ச்சி தெரிவிப்பு

posted in: தமிழ்நாடு | 0

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது தொடர்பாக தமிழக முதல்வர் மு.கருணாநிதி பிரதமருக்கும், சோனியாவுக்கும் மகிழ்ச்சி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.


பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமருக்கும், சோனியாவுக்கும் அனுப்பியுள்ள தந்தியில் கூறி இருப்பதாவது:-

பாராளுமன்ற மேல்-சபையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது எனக்கு முற்றிலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதன்மூலம், இந்திய மகளிருக்கும் அதிகாரம் அளிப்பதில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் செழித்தோங்க புதிய வழி பிறந்துள்ளது.

இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.