உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழாசிரியர் பட்டியல் தயாரிப்பு : ரகசியம் காக்க அதிகாரிகளுக்கு வாய்பூட்டு

posted in: தமிழ்நாடு | 0

விருதுநகர் : உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், வெளியிடப்படும் கட்டுரைகள் மதிப்பீடு செய்ய தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் தமிழாசிரியர்கள் பட்டியல் பெறப்பட்டுள்ளது.

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, வரும் ஜூனில் கோவையில் நடக்கிறது. இதற்காக மாவட்டம் தோறும் தமிழ் வளர்ச்சித் துறைக்கு, அந்தந்த பகுதி கல்லூரி தமிழாசிரியர்கள் பட்டியலை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழாசிரியர்களின் விவரங்கள், முகவரியுடன் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் பட்டியல் ரகசியமாக பெறப்பட்டுள்ளது. கட்டுரைகளை மதிப்பீடு செய்வது யார் என்பதும் ரகசியமாக இருக்க வேண்டும்; இதுகுறித்து எதுவும் பேசக்கூடாது, என அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.