தனியார் நிதி நிறுவனங்களுக்கு வங்கி அந்தஸ்து : ரிசர்வ் வங்கி ஆலோசனை

posted in: வர்த்தகம் | 0

புதுடில்லி: வங்கிகள் அல்லாத 12 தனியார் நிதி நிறுவனங்களுக்கு வங்கி அந்தஸ்து வழங்குவது குறித்து, ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் தவிர, பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை வங்கிகளாகச் செயல்படாமல் குறிப்பிட்ட சில விதிமுறைகளின் அடிப்படையில் மக்களிடம் கடன் மற்றும் முதலீடு தொடர்பான

நிதிச் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இவற்றில் தற்போது, ஆதித்யா பிர்லா குழுமம், டாடா கேப்பிட்டல், ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரெலிகேர் குழுமம், முத்தூட் குழுமம் ஆகியவை மற்றும் தமிழகத்தில் ஸ்ரீராம் நிதிநிறுவனம் உள்ளிட்ட 12 தனியார் நிதிநிறுவனங்கள் வங்கி அந்தஸ்தைப் பெறலாம் என்று

தகவல்கள் தெரிவிக்கின்றன.ரிசர்வ் வங்கி, இதற்கான வழிகாட்டல்களை உருவாக்கி வருவதாகவும் தெரியவருகிறது. பட்ஜெட் அறிவிப்பின் போது இதைத் தெரிவித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,

‘வங்கிச் சேவைகளை அதிகரிப்பதற்காகவும், நாடு முழுவதும் வங்கிகளை அதிகரிக்கவுமான தேவை இப்போது இருப்பதால், தனியார் நிதிநிறுவனங்களுக்கு வங்கி அந்தஸ்து வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது’ என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை, ஆதித்யா பிர்லா குழுமம் உள்ளிட்ட அனைத்து நிதி நிறுவனங்களும் வரவேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.