தமிழர் வேண்டுவது தம்மை தாமே ஆளும் வகையான சுய ஆட்சியே என்பதையே தேர்தல் முடிவு காட்டுகின்றது: வட-கிழக்கு உணர்வு
தம்மைத் தாமே ஆளும் அதிகாரம் கூட ஒரு ஜனநாயக உரிமை தான் என்பதுவே தமிழரின் கருத்து. நீண்ட காலமாகத் தாம் அதனையே கேட்டு வருகின்றார்கள் என்பதையே நடந்து முடிந்த குடியரசு அதிபர் தேர்தல் முடிவுகள் மூலம் அவர்கள் காட்டியுள்ளனர்.
தமிழ் முஸ்லிம் வாக்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை ஒன்றிணைந்து குவிந்தது ஒரு மிக முக்கிய விடயம். அத்தோடு - அவர்கள் சிறிலங்காவின் ஏனைய பகுதகளில் வாழும் மக்களது விருப்பங்களிற்கு மாறாக வாக்களித்தனர். அவர்கள் தமது சுய அரசியல் வேட்கையை வெளிப்படுத்தும் விதமாக வாக்களித்தனர்.
இந்த நிலையானது - அதிகாரப் பரவலாக்கம் செய்து, தமிழர் தாயகத்திற்கு சுய ஆட்சி உரிமையை வழங்க வேண்டும் என்ற வாதத்தையே பலப்படுத்துகின்றது.
Source & Thanks : puthinappalakai
























