மலேசியாவில் விநோதம் கள்ளக் காதல் ஜோடிக்கு எருமை, பன்றி அபராதம்

கோலாலம்பூர்: மலேசியாவில் பெனாம்பாங் மாவட்டத்தில் கள்ளக் காதல் ஜோடிக்கு 4 எருமை மாடுகள், ஒரு பன்றி ஆகியவற்றுடன் 600 டாலர் ரொக்கம் அபராதம் செலுத்த வேண்டும் என அம்மாவட்ட மரபுவழி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


கள்ளக் காதல் ஜோடியில் ஆணுக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது. அவர் தன்னுடைய வீட்டில் உடன் வேலை பார்க்கும் பெண்ணுடன் இருக்கும் பொழுது அவரது மனைவியே கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். உடனே மனைவி போலீசில் புகார் செய்தார்.
விசாரணை நடந்தது. “என் மனைவி சொல்வது உண¢மை இல்லை. நானும் அந்தப் பெண் ணும் நல்ல நண்பர்கள். அவ்வளவுதான்” என்று கணவர் கூறினார். இந்தப் பதிலை மனைவி யும் ஏற்கவில்லை. நீதிமன்றமும் ஏற்கவில்லை.
4 எருமை மாடுகளும் ஒரு பன்றியும் வாங்கி இருவரும் தங்கள் வாழும் கிராமச் சமுதாயத் துக்கு அபராதமாக செலுத்த வேண்டும் என்று கள்ளக் காதல் ஜோடிக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. இந்த எருமை மாடுகளும் பன்றியும் 1800 அமெரிக்க டாலர் மதிப்புள்ளதாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

Source & Thanks : dinakaran

Leave a Reply

Your email address will not be published.