மெக்சிகோவில் 14 மாணவர்களை சுட்டு கொன்ற மர்ம மனிதன்

மெக்ஸிக்கோ விருந்துபசாரமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிஹூவாட் ஜூராஸ் நகரின் உயர் நிலைப் பள்ளி ஒன்றில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் குழு ஒன்று மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் 11 பேர் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த துப்பாக்கிதாரி கண் மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது இதுவரையில் புலனாகவில்லை.

எனினும், விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட நபர்களுக்கும் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மெக்ஸிக்கோவின் சிஹூவாட் ஜூராஸ் நகரம் உலகின் மிக பயங்கரமான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றனது.

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்;தக்கது.

15 பேரைக் கொண்ட கும்பல் ஒன்றே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனத்தில் வந்து இந்தத் தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் 15 – 20 வயது வரையிலானவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

Source & Thanks : z9world

Leave a Reply

Your email address will not be published.